புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் குவிந்த மக்கள்.. நெடுவாசலில் கடை அடைப்பு! #saveneduvasal

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை : புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திரளில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செல்லும் விதமாக நெடுவாசல் கிராமத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இன்று புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் திடலில் 2 மணி முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அக்கம்பக்கத்து கிராமத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பங்கேற்றுன்னர்.

 To participate in Pudukottai protest Neduvasal shops remains closed

நீதிமன்ற அனுமதியுடன் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 கிராம மக்கள் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போலீஸ் அனுமதி மறுத்தாலும் நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கும் விதமாக நெடுவாசலில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
To hold support hands with Pudukottai Protestors Neduvasal shops remains closed and thousands of people gathered at the protest place.
Please Wait while comments are loading...