For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”ஜிங்குச்சா ஜிங்குச்சா கட்சிக்கொடிங்க ஜிங்குச்சா” – கலர்கலராய் பறக்கும் கட்சிக் கொடிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் நமக்கெல்லாம் தெரிந்த ஒரே வண்ணம் வெள்ளை. அதுதான் காந்தி தாத்தா காட்டிய கதரின் வண்ணம்.

1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததும், முதலில் உருவானது இந்தியாவின் தேசியக் கொடி. செங்காவி, வெள்ளை, பச்சை நிறக் கொடியில் நடுவில் நீல நிற அசோக சின்னத்துடன் கம்பீரமாக இன்று வரை உயர்ந்து நிற்கின்றது.

இதே கொடியை அப்படியே உல்டா செய்து காங்கிரஸ் கொடியாக மாற்றினர். அதன் பின்னர் பல்வேறு கட்சிகள் என்று உருவாக ஆரம்பித்ததோ அன்றே தேசியக் கொடி எது என்பதை மறந்து போகும் அளவிற்கு கலர்கலராய், விதவிதமாய், ரகரகமாய் ஊருக்கு ஊர், கம்பத்திற்கு கம்பம் பறக்கின்றது.

நாளுக்கு நாள் புற்றீசல் போல் உருவாகும் கட்சிக் கொடிகள் பற்றிய ஒரு கல கல ரிப்போர்ட்...

ஜிங்குச்சா “காங்கிரஸ்”:

ஜிங்குச்சா “காங்கிரஸ்”:

இந்தியாவில் சுதந்திரம் கிடைத்தபோது இருந்த முதல் கட்சி "காங்கிரஸ்". அதனால் அங்கிருந்தே நம்முடைய கட்சிக் கொடி ரவுண்ட் அப்பை ஆரம்பிக்கலாம். காங்கிரஸின் கட்சிக் கொடியனது தேசியக்கொடிக்கு கொஞ்சம் மாடிபிகேஷன் செய்தது போல் இருக்கும். மேலே, ஆரஞ்சு, வெள்ளை, பச்சை. நடுவில் கையையோ, ராட்டையையோ போட்டு அவ்வப்போது ஃபில் பண்ணிக் கொள்வார்கள்.

”டூயல் வெர்ஷன்” அதிமுக:

”டூயல் வெர்ஷன்” அதிமுக:

அதிமுகவினைப் பொறுத்தவரையில் இரண்டு வெர்ஷன் கொடிகள் உண்டு. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அதாவது அதிமுகவின் கொடியானது, கருப்பு, வெள்ளை, சிவப்பு கொண்டது. அதேபோல கருப்பு, சிவப்பின் நடுவே அண்ணாவின் படம் கொண்ட கொடியும் இக்கட்சிக்கு உரியதுதான்.

”டபுள் கலர்” திமுக:

”டபுள் கலர்” திமுக:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கொடியில் இருந்து அண்ணாவை மட்டும் ஒதுக்கிவிட்டு பார்த்தால் அதுதான் திமுகவின் கொடி. மேலே கருப்பு, கீழே சிவப்பு இதுதான் திமுகவின் கட்சிக் கொடி.

”ஆல் ஃபுளூ” அமுக:

”ஆல் ஃபுளூ” அமுக:

அம்பேத்கர் முன்னேற்ற கழகத்தின் கொடி கொஞ்சம் வித்தியாசம். வழக்கமான கருப்பு, வெள்ளை, சிவப்பு காம்பினேஷன் இல்லாமல் மேலேயும், கீழேயும் நீலம், நடுவில் வெள்ளையில் டாக்டர் அம்பேத்கர் படம் என்று அமைந்துள்ளது.

பளபள பாமக:

பளபள பாமக:

பாமகவின் கட்சிக் கொடியினை எடுத்துக் கொண்டால் கண்கள் கூசும் அளவிற்கான நிறங்களைக் கொண்டிருக்கும். ஊதா, மஞ்சள், சிவப்பு என்ற வண்ணக்கலவையில் அமைந்திருக்கும் பாமகவின் கட்சிக் கொடி.

கலந்து கட்டிய மதிமுக:

கலந்து கட்டிய மதிமுக:

மதிமுகவின் கட்சிக் கொடி திரிசங்கு சொர்க்கம் போல அதிமுகவும், இல்லாமல், திமுகவும் இல்லாமல் புது ரகமாய் இருக்கும். மேலும், கீழும் சிவப்பும் நடுவில் கருப்புமாய் அமைந்த காம்பினேஷன் தான் மதிமுக.

”ஸ்ஸ்ப்பா” சமக:

”ஸ்ஸ்ப்பா” சமக:

சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் கொடி இன்னும் பயங்கரம். மேலே, நல்ல சிவப்பு, கீழே மஞ்சள், சிகப்பு பகுதியில் ஒரு வெள்ளை நட்சத்திரம் என்று ஒரே "மஞ்சள் குங்கும" மகிமைதான் போங்க.

நாமம் போட்டதுபோல் “நாமக”:

நாமம் போட்டதுபோல் “நாமக”:

கார்த்திக்கின் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியோ சிவப்பும், வெள்ளையும் சேர்ந்து பட்டை நாமம் குழைத்துச் சாத்தியதுபோலவே இருக்கும்.

அப்டியே இருக்கு:

அப்டியே இருக்கு:

வாசனின் புதிய கட்சிக் கொடியோ ஆரஞ்சு, வெள்ளை, பச்சை என்று காங்கிரஸின் ரிப்ளிக்காதான்.

திருந்துங்கப்பா பிளீஸ்:

திருந்துங்கப்பா பிளீஸ்:

மொத்தத்தில் இருக்கின்ற நான்கு ஐந்து கலர்களைக் கலந்துகட்டித்தான் எல்லா கட்சிகளின் கொடிகளும் அமைந்துள்ளன. கலர்களையே நம்மால் பிரிக்க முடியாத போது, கட்சிகளாய் பிரிந்து கிடந்து, மக்களையும் பிரிவினைக்கு உள்ளாக்கும் இவர்களெல்லாம் தங்களின் கட்சிக் கொடிகள் சொல்லும் சூட்சுமத்தாலாவது திருந்தினால் சரிதான்.

English summary
Indian parties using various types of flags but, having same color combination in different manner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X