For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"வேறெதுவும் தேவையில்லை இதுமட்டும் போதும்' சென்னை வாழ் நாங்குநேரி மக்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Google Oneindia Tamil News

சென்னை: வேறெதுவும் தேவையில்லை தீபாவளிக்கு ஊருக்கு போய் வர காசு வந்தா போதும் என்ற அளவில் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சென்னை வாழ் நாங்குநேரி காரர்கள்.. தீபாவளிக்கு ஊருக்கு போகவிருந்த மக்கள் ஒரு வாரம் முன்பே தேர்தல் காரணமாக குடும்பத்தோடு ஊருக்கு போக தயாராகி வருகிறார்கள். அதற்கு காரணம் கட்சிகள் தான்.

நாங்குநேரியில் இடைத்தேர்தல் அறிவித்ததில் இருந்தே மக்கள் செம்ம ஹேப்பி அண்ணாச்சி.. .. நல்ல ரோடு வந்திரும்.. தண்ணீர் பிரச்சனை தீர்ந்திடும்.. காசு பணம் நல்ல பொழங்கும். என மக்கள் மகிழ்ச்சியில் ரெக்கக்கட்டி பறக்குறாங்க.

parties plan to give bus fare to chennai based nanguneri peoples

ஆனால் நாங்குநேரியைச் சேர்ந்த வெளியூரில் வாழும் மக்களோ தீபாவளிக்கு ஊருக்கு வர்றதா அல்லது இடைத்தேர்தலுக்கு வர்றதா என கன்பியூசனில் இருந்தாங்க. ஏனெனில் இரட்டை செலவு காரணமாகவே இப்படி யோசித்தார்கள்.

இதனிடையே திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊருள்ள நாலு பேருல்ல ஒரு ஆள் நிச்சயம் சென்னையிலோ அல்லது கோவை திருப்பூர் போன்ற ஊர்களிலோ இருக்கிறார்கள். குறிப்பாக நாங்குநேரி தொகுதியில் வெளியூரில் போய் வேலை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம்

நாங்குநேரி இடைத்தேர்தல் 21ம் தேதி வரும் நிலையில் தீபாவளி வரும் அக்டேபார் 27ம் தேதி வருகிறது. பேருந்து செலவுக்கு பயந்து ஊருக்கு போக பயந்து சென்னையிலேயே இருக்கும் மக்களை லிஸ்ட் எடுத்து அவர்களை மொத்தமாக அழைத்து வந்து ஓட்டுபோட வைக்க ஒரு தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.

இவர்களை தீபாவளியை காரணம் காட்டி மொத்தமாக ஒரு வாரத்திற்கு முன்னாடியே ஊருக்கு வாங்க வந்து போறச் செலவை நாங்க பார்த்துகிறோம் என முக்கிய கட்சியினர் அழைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 18 மற்றும் 19களில் ஏராளமான பேருந்துகள் செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் . அப்போது பேருந்துகளை சோதித்தால் பல உண்மைகள் வெளி வர வாய்ப்பு இருக்காம். ஆனால் இதை இரு தரப்புமே மறுக்கின்றன. வாக்காளர்களை ஊருக்கு வாங்க என்று பாசத்தோடு அழைப்பதை தாண்டி தாங்கள் வேறு எதுவும் செய்யவில்லை என்கின்றன கட்சிகள்.

English summary
nanguneri by-election: parties plan to give bus fare to chennai based nanguneri people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X