For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி செல்லக் கூடாது - சசிகலா குடும்பத்தைத் தாக்கிய ஆனந்தராஜ்

அதிமுக, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினர் கையில் சென்றுவிடக் கூடாது. எம்ஜிஆர், தன் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் குடும்பம் ஆட்சியில் தலையிடுவதை விரும்பியது இல்லை என நடிகர் ஆனந்தராஜ் கூறினார்

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு குடும்பத்தின் கையில் அதிமுக செல்லக் கூடாது. அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர் தன் சக்ரபாணியின் குடும்பம் தலையிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அப்போதே அறிவுறுத்தினார் என நடிகர் ஆனந்த ராஜ் கூறியுள்ளார்.

Party should not go into a hands of particular family - Actor Ananda raj

நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அதிமுகவில் தற்போது நிலவி வரும் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தைக் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், கட்சியிலும் ஆட்சியிலும் தன் அண்ணன் எம்.ஜி சக்ரபாணி குடும்பத்தாரின் தலையீடு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் கூறினார். ஆனால், அப்படி எம்ஜிஆர், குடும்ப தலையீடு இருக்கக் கூடாது என்று பார்த்து வளர்த்தக் கட்சியில் ஒரு குடுய்ம்பத்தின் ஆதிக்கம் தான் இருக்கிறது.

ஒருவர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். அவர்கள் குடும்பம்பத்தைச் சேந்ர்த இன்னொருவரே துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார். ஆனால், அவர் சொல்கிறார் குடும்பத்தாரின் தலையீடு இருக்காது என்று கூறுகிறார். இனிமேல் குடும்பத்தார் தலையீடு இருப்பதற்கு என்ன இருக்கிறது. இந்த நிலையில் இன்னொருவர் கட்சிக்கு வெளியே இருந்துகொண்டு கட்சியைக் கட்டுப்படுத்தி வருகிறார்'' என்று கூறினார்.

இதன்மூலம் டிடிவி தினகரனின் தலைமையை ஏற்காத பல கோடி அதிமுக தொண்டர்களில், நடிகர் ஆனந்தராஜும் ஒருவர் என்பது புரிந்தது.

English summary
Actor Ananda raj in a pressmeet at his residence that Admk should not go into the hands pf particular family. MGR never liked his brother's family interference in part matters told Ananda raj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X