For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை கடற்கரையில் இருந்து ராமேஸ்வரம், நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கனமழையால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடற்கரையில் இருந்து திருநெல்வேலி, ராமேஸ்வரம், ஹவுராவுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:

Passenger special trains from Jolarpet, Chennai Beach and Arakonam

•ஜோலார்பேட்டையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, பாலக்காடு, எர்ணாக்குளம் நகரம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

•சென்னை கடற்கரையில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

•சென்னை கடற்கரையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

•சென்னை கடற்கரையில் இருந்து ஹவுராவுக்கு இன்று காலை 8 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

•அரக்கோணத்தில் இருந்து சென்னை மும்பை சிஎஸ்டிக்கு நாளை காலை 8.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே விசாரணைக்கு 139

பலத்த மழை காரணமாக மின் பழுது ஏற்பட்டு "139" என்ற ரயில்வே விசாரணை எண் பழுதடைந்தது. தற்போது இந்த எண் சரி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

English summary
Southern Railway will operate five passenger special trains on December 4 Friday for stranded passengers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X