For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த தஞ்சை கோர்ட்: மதுரை கோர்ட்டை நாடிய பழ. நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர்

By Siva
Google Oneindia Tamil News

Pazha. Nedumaran seeks Madurai HC to grant bail
சென்னை: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பகுதியில் இரவு நேரத்தில் விதிகளை மீற ஒலி பெருக்கி பயன்படுத்திய வழக்கில் கைதான உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 83 பேரின் ஜாமீன் மனுக்களை தஞ்சை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அணுகியுள்ளனர்.

இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக தஞ்சை விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றம் கடந்த 8ம் தேதி திறக்கப்பட்டது. ஆனால் நினைவு முற்றம் அமைக்கப்பட்ட பகுதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்று கூறி அதன் சுற்றுச்சுவரை இடித்து தள்ளினர்.

இந்நிலையில் விதிகளை மீறி அங்கு இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தியதாக உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் உள்பட 83 பேர் வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரும் ஜாமீன் கோரி தஞ்சை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

English summary
83 persons including Tamil Desiya Iyakkam chief Pazha. Nedumaran have approached Madurai high court after a Tanjore court rejected their bail plea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X