For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாருங்க இந்த பிரில்லியன்ட் ஜட்ஜ்... எனக்கே இவரைப் பார்க்கனும் போல இருக்கே!

பெண் மயில் எப்படி கர்ப்பமாகும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்பை கூறியிருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: சட்டப் புத்தகத்தைப் படித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய நீதிபதி ஆண் மயிலும் பெண் மயிலும் எப்படி பாலுறுவு கொள்கிறது என்று சொல்லி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி மகேஷ் சந்திர சர்மா, ஆண் மயில் பிரம்மச்சர்யத்தை பின்பற்றும் பறவை.

அது ஒருபோதும் பெண் மயிலுடன் உறவு கொள்வதில்லை. ஆண் மயிலின் கண்ணீரைப் பருகியே பெண் மயில் கர்ப்பம் தரிக்கிறது என்று அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத ஒன்றை உளறிக் கொட்டினார்.

கிருஷ்ணனோடு முடிச்சி

கிருஷ்ணனோடு முடிச்சி

இத்தோடு நிறுத்தி இருந்தாலும் பரவாயில்லை அந்த புத்திகெட்ட நீதிபதி. பெண் மயிலுடன் உறவு வைத்துக் கொள்வதில்லை என்பதாலேயே அவை புனிதமானவை என்று பிதற்றியுள்ளார். அதனால்தான் கிருஷ்ணன் என்ற கடவுள் தனது தலையில் மயிலிறகை சூடிக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

பசு தேசிய விலங்கு

பசு தேசிய விலங்கு

இதேபோல் பசுவுக்கும் பல தெய்வீக குணங்கள் இருக்கின்றன. அதனால் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று போகிறப் போக்கில் நச்சை சமூகத்தில் விதைத்துச் சென்றிருக்கிறார் மகேஷ் சந்திர சர்மா.

கொல்வோருக்கு ஆயுள்

கொல்வோருக்கு ஆயுள்

முன்னதாக, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த புண்ணியவான் இவர். அதே போன்று பசுவை கொல்பவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை என்பதை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று அருள் பாலித்தவர்.

அச்சம்

அச்சம்

அறிவியலில் எந்த அடிப்படையும் இல்லாமல் ஒரு நீதிபதி இப்படி பேசி இருப்பது பெரும் சர்ச்சையை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறது. நீதிமன்றத்தில் இவரிடம் வந்த வழக்குகளில் எப்படி நடந்து கொண்டிருப்பார், எப்படி தீர்ப்பு கொடுத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

English summary
Rajasthan high court judge, said peacock do not have sex. It created controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X