For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு:முதல்வரா இருந்தப்போ மக்கள் படும் துயரம் புரிஞ்ச மோடிக்கு இப்போ புரியலையா?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அதிருப்தி-வீடியோ

    சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக தினசரி அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை நிர்ணயித்து வருகின்றன.

    இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 வாரங்களாக ஏறுமுகமாக உள்ளது. இதன்காரணமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று உயர்த்தப்பட்டது.

    டீசல் விலை

    டீசல் விலை

    சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 காசு உயர்ந்து ரூ.79.13 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. இதேபோன்று ஒரு லிட்டர் டீசல் விலையானது 28 காசு உயர்ந்து ரூ.71.32 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையானது.

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு

    பெட்ரோல் டீசல் விலை உயர்வு

    இந்நிலையில், இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 34 காசு உயர்த்தப்பட்டு ரூ.79.47 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலையானது 27 காசு உயர்ந்து ரூ.71.59 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

    பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

    இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலை நாளை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெரும் சவாலாக உள்ளது

    பெரும் சவாலாக உள்ளது

    சம்பாதிக்கும் பணமெல்லாம் பெட்ரோல் டீசலுக்கே செலவாகுவதாகும். இதனால் குடும்பத்தை நடத்துவது நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.

    பொதுமக்கள் கோரிக்கை

    பொதுமக்கள் கோரிக்கை

    இதனை மத்திய அரசு கருத்தில் கொண்டு மானாவாரியாக உயரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அப்போ ஒரு டிவிட்

    இதனிடையே பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பதிவிட்ட டிவிட் தற்போது வைரலாகியுள்ளது. அதாவது பெட்ரோல் டீசல் மீதான மிகப்பெரிய விலை உயர்வு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு உதாரணம் என பதிவிட்டுள்ளார்.

    மக்களை மறந்துவிட்டாரா?

    மக்களை மறந்துவிட்டாரா?

    மோடியின் அந்த டிவிட் தற்போது வைரலாகி வருகிறது. குஜராத் முதல்வராக இருந்தபோது மக்கள் படும் கஷ்டம் புரிந்த மோடிக்கு தற்போது புரியவில்லையா? மக்களை மறந்துவிட்டாரா என மக்கள் சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    English summary
    People affected heavily by the petrol diesel price hike. People asking modi cant understand people burden after he became prime minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X