For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திராவிடக்கட்சிகளின் செயல்பாட்டையே மக்கள் விரும்புகின்றனர்... சொல்கிறார் ஓபிஎஸ்!

திராவிடக்கட்சிகளின் செயல்பாட்டையே மக்கள் விரும்புவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திராவிடக்கட்சிகளின் செயல்பாட்டையே மக்கள் விரும்புவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.

தமிழகத்தில் எந்த நிலையிலும், எந்த காலத்திலும் தேசிய கட்சிகள் காலூன்ற இடமில்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

பாஜகவுடன் மோதலா?

பாஜகவுடன் மோதலா?

ஓபிஎஸின் இந்த பேச்சு தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாகியுள்ளது. பாஜக - அதிமுக இடையே மோதல் ஏற்பட்டு உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்தன.

விரிசல் என பார்க்கக்கூடாது

விரிசல் என பார்க்கக்கூடாது

இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தனது கருத்தை விரிசல் என பார்க்கக்கூடாது என்றார்.

மக்கள் விரும்புகின்றனர்

மக்கள் விரும்புகின்றனர்

மேலும் தேசிய கட்சிகள் அரசியல் ரீதியாக தமிழகத்தில் காலூன்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். திராவிடக்கட்சிகளின் செயல்பாடுகளில் மக்கள் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொடுப்பது அவர்களின் கடமை

கொடுப்பது அவர்களின் கடமை

மேலும் கர்நாடகாவிடம் காவிரி நீர் கேட்பது நமது உரிமை என்ற அவர், காவிரி நீரை கொடுப்பது கர்நாடகாவின் கடமை என்றார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்படும் என நம்புகிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அடிப்படை ஆதாரமற்றது

அடிப்படை ஆதாரமற்றது

நியூட்ரினோ திட்டம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் 1000 பேருந்து தடங்களை அமைச்சர்கள் பெற்றுள்ளதாக பழ கருப்பையா கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் அதில் உண்மையில்லை என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

English summary
Deputy Chief Minister O.Panniriselvam said that people prefer the function of the Dravidian party activities. He said that national parties are not taken action to act politically in Tamil Nadu. He said that people are interested in the functions of Dravidian parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X