For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுராத்திரியில் அதிமுக எம்எல்ஏ வீட்டு கதவை தட்டி குடிக்க தண்ணீர் கேட்ட பொதுமக்கள்!

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி வேடச்சந்தூர் எம்எல்ஏ வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திண்டுக்கல்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி திண்டுக்கல் அருகே எம்எல்ஏ வீட்டை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வடகிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டதால் கடந்த ஜனவரி மாதம் முதல் கடும் வறட்சி நிலவி வருகிறது. பயிர்கள் சேதமடைந்து, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தண்ணீரின்றி மக்கள் காலிக் குடங்களுடன் தெரு தெருவாக அலைந்து வரும் நிலை உள்ளது.

People blockaded Dindigul MLA's house to resolve water issues

இந்நிலையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வெறும் ரூ.52 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தினமும் எம்எல்ஏ, அமைச்சர், அரசு அதிகாரிகள், லாரிகள் ஆகியவற்றை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எனினும் அப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சுட்டெரிக்கும் வெயிலால் நீர் நிலைகளில் ஆங்காங்கே குட்டை போல் தேங்கி வரும் தண்ணீரை கொண்டு எத்தனை நாள்களுக்கு தண்ணீர் விநியோகம்செய்ய முடியும் ென்பது குறித்து அதிதகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், குண்டாம்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீர் இல்லாததால் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கூலித் தொழிலாளிகளான அவர்கள் வாங்கும் ஊதியம் வாய்க்கும், வயிற்றுக்குமே போதாத நிலையில் தண்ணீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதே என்று ஆத்திரமடைந்தனர்.

இதனால் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் வீட்டை நள்ளிரவில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

English summary
Water crisis throughout Tamil Nadu. Poor People buys drinking water, so people from Dindigul Dist has blockaded Vedachandur MLA Paramsivam's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X