For Daily Alerts
Just In
நிர்மலா தேவி குறித்து தகவல் தெரிந்தால் கூறலாம்.. பொதுமக்களுக்கு விசாரணை அதிகாரி அழைப்பு

நிர்மலா தேவி குறித்து இன்று விசாரணை ஆரம்பம் - ஐ ஏ எஸ் அதிகாரி சந்தானம்-வீடியோ
மதுரை: நிர்மலா தேவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் என விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.
மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி பாலியல் தொழிலுக்கு அழைத்தது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் இன்று விசாரணை தொடங்கியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார். இந்நிலையில் நிர்மலா தேவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் 21, 25, 26 ஆகிய 3 நாட்கள் தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். 3 நாட்களிலும் விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக தகவல் தரலாம் என்றும் விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார்.