For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லூர் ராஜூ பேசுவதை எல்லாம் நம்ப முடியாது மக்களே... முதல்ல இதை படிங்க

செல்லூர் ராஜூ பேசுவதை எல்லாம் நம்பவே முடியாது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    செல்லூர் ராஜூ சொல்வதை நம்பவே முடியாது- வீடியோ

    சென்னை: அதிமுகவுக்கு ரஜினி தலைவராக வர முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்வதை எல்லாம் நம்பவே முடியாது. ஏனெனில் அதிமுகவில் சினிமாக்காரர்கள் தலைமை வகித்த வரலாற்றுகள் இருக்கின்றன.

    ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறி தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். நீண்ட நாள்கள் கழித்து அவர் பேசிய அரசியல் பேச்சு இதுதான் என்பதால் பரபரப்பு தொற்றியது.

    இதையடுத்து அவர் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்தார். பின்னர் சமீபகாலங்களாக தமிழக அரசு மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு அதன் செயல்பாடுகள் சூப்பர் என்று சூப்பர் ஸ்டாரே பாராட்டி வருவது மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

    அமித் ஷா காய் நகர்த்தல்

    அமித் ஷா காய் நகர்த்தல்

    இந்நிலையில் ரஜினி மூலம் பாஜக ஆட்சியை கொண்டு வர அவரை அதிமுகவின் தலைவராக்க அமித்ஷா படாதபாடு பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதன் மூலம் இந்தியாவின் அடுத்த பிரதமராக மீண்டும் மோடியை அமர்த்துவதற்கு காய் நகர்த்தப்பட்டு வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.

     தலைவர்கள் இல்லை

    தலைவர்கள் இல்லை

    இதுகுறித்து செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் அதிமுகவுக்கு தலைவராக ரஜினி என்றுமே வர முடியாது. வேண்டுமானால் தொண்டனாக வரலாம். அதிமுகவில் மக்களை கவரக் கூடிய தலைவர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

    ஜெயலலிதாவும் நடிகைதான்

    ஜெயலலிதாவும் நடிகைதான்

    செல்லூர் ராஜூ சொல்வதை எல்லாம் நம்பவே முடியாது. காரணம் அதிமுகவை ஆரம்பித்ததே ஒரு நடிகர்தான். அதன் தலைமைப் பொறுப்புக்கு இடைக்காலமாக வந்த ஜானகி எம்ஜிஆரும் ஒரு முன்னாள் நடிகைதான். அதன் பின்னர் கட்சியைக் கைப்பற்றி கடைசி வரை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஜெயலலிதாவும் நடிகைதான்.

    சிறந்த பேச்சாளர்

    சிறந்த பேச்சாளர்

    நடிப்புக் கவர்ச்சி பின்னால் போனவர்கள்தான் அதிமுகவின் ஆரம்பகாலம் மற்றும் பிற்கால தொண்டர்களும். எம்ஜிஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, அண்ணா, கருணாநிதிக்கு இணையான பேச்சாளர்களும் இல்லை. அதேபோலத்தான் ரஜினியும், சிறந்த பேச்சாளர் என்று கூற முடியாது.

    ரஜினி தலைவராக வந்தால்....

    ரஜினி தலைவராக வந்தால்....

    எனவே அதிமுகவுக்கும் நடிகர்களுக்கும் எப்போதும் பொருத்தம் அதிகம். அதிமுக தொண்டர்களும் தத்துவத்தைப் பார்த்தோ, திறமையைப் பார்த்தோ தலைமைக்குப் பின்னால் போகிறவர்கள் கிடையாது. அவர்களுக்குத் தேவை ஒரு கவர்ச்சி. அந்த கவர்ச்சியாக அவர்கள் ரஜினியைப் பார்த்தாலும் பார்க்கலாம். அதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    English summary
    Sellur Raju says that Rajinikanth cannot be a Chief of ADMK. But we cannot belive his words. There was history in ADMK that cinema actors was made as ADMK Chiefs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X