For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருமை.. அப்படியே இருக்கு.. கை மட்டும் சரி பண்ணிருக்கலாம்.. கருணாநிதி சிலைக்கு வரும் கமெண்ட்ஸ்!

அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை குறித்து திமுக தொண்டர்கள், மக்கள் நிறைய கருத்து தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை குறித்து திமுக தொண்டர்கள், மக்கள் நிறைய கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது. இந்த சிலை இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.

இந்த சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைக்கிறார்.

திமுக டிவிட்

இதுகுறித்து திமுக கட்சி டிவிட் செய்துள்ளது. அதில் ''சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படவுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் 8 அடி உயர முழு வெண்கல திருவுருவச்சிலை வடிவமைப்புப் பணிகளை கழக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை உருவாகி வருகிறது.'' என்றுள்ளது.

கொஞ்சம் கவனிக்கவும்

இதுகுறித்து டிவிட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் '' தலைவரின் வலதுகை சரியாக பொறுந்தாதது போல் தெரிகிறது. கொஞ்சம் கவனிக்கவும் உடன்பிறப்புகளே'' என்று இவர் கூறியுள்ளார்.

கேமரா கோணம்

இவர் இது கேமரா கோணத்தினால் அப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்றுள்ளார்.

மிக்க மகிழ்ச்சி

இவர் ''மகிழ்ச்சி .தலைவரே '' என்றுள்ளார். நிறைய பேர் இந்த சிலையை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எப்படி இருப்பார்

இவர் ''உடல் உருவத்துக்கேற்ற கை பொருந்த வில்லை, மேலும் தலைவர் எப்போதும் விரல் விரித்து உதய சூரியன் சின்னத்தை நினைவு கூறும் படி காட்டுவார். கவனம் தேவை அறிவாலயத்தில் அமரும் தலைவரின் சிலைஎன்றுள்ளார்.

ஜெயலலிதா சிலை

ஜெயலலிதா சிலை

இதே போல் சில நாட்களுக்கு முன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டது. ஆனால் இந்த சிலைக்கு எதிராக நிறைய விமர்சனம் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
People comments about the Statue of DMK leader late Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X