For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக-கர்நாடக எல்லை சீல்.. மூட்டை முடிச்சுகளோடு நடந்தே செல்லும் பயணிகள் #cauvery

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பந்த் எதிரொலியாக கர்நாடக வாகனங்கள் தமிழகத்தில் நுழைய போலீஸ் அனுமதி மறுத்துள்ளனர். இரு மாநில எல்லையும் சீல் வைக்கப்பட்டதை போல காட்சியளிக்கிறது.

கர்நாடகா-தமிழக எல்லையில் கர்நாடகாவின் கடைசி ஏரியா பெயர் அத்திபெலே. இதில் தமிழக-கர்நாடக எல்லையை குறிக்கும் வகையில் இந்தியா கேட் பாணியில் ஒரு கட்டிடமும் உள்ளது.

People cross the Tamilnadu Karnataka border by walk

இந்த எல்லையில், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஒசூர் உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு செல்ல வேண்டிய பெங்களூர் பயணிகள், அத்திபெலே வரை கர்நாடக வாகனங்களில் வந்து, அங்கிருந்து சுமார் 2 கி.மீ நடந்து எல்லையை தாண்டி தமிழகத்திற்குள் வந்து தமிழக வாகனங்களில் ஏறிச்செல்கிறார்கள்.

மூட்டை முடிச்சுகளோடு ஆயிரக்கணக்கான மக்கள் இரு மாநில எல்லையையும் கடந்து செல்வது பரிதாபத்தை வரவழைப்பதாக உள்ளது.

English summary
People cross the Tamilnadu Karnataka border by walk as TN Bandh is going on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X