For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டு தடை.. மத்திய அரசின் முடிவை மக்கள் ஆதரிக்கிறார்கள்.. தந்தி டிவி கருத்துக்கணிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

டென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடையை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாக தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு கூறுகிறது.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதன்பிறகு வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் கூட்டம் அலை மோதியது. 40 நாட்களை தாண்டிய போதும் பணத்தட்டுப்பாடு முழுமையாக தீர்ந்தபாடில்லை. பல ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாமலே உள்ளது.

34 % people did not support Demonetisation, says thanthi tv

இந்நிலையில் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை குறித்து மக்களின் கருத்தை அறிய தந்தி டிவி கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி ரூபாய் நோட்டு தடையை பெரும்பாலான மக்கள் ஆதரிப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது.

ஆம் - 61%

இல்லை -34%

கருத்து இல்லை - 5%

people did not support Demonetisation, says thanthi tv

ரூபாய் நோட்டு தடை - திட்டமும் செயலாக்கமும் என்ற தலைப்பில் நடத்திய கருத்துக்கணிப்பில் நல்ல திட்டம், மோசமான செயலாக்கம் என 95% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நல்ல திட்டம், நல்ல செயலாக்கம் - 3%, கருத்து இல்லை என 2% பேர் தெரிவித்துள்ளனர்.

people did not support Demonetisation, says thanthi tv

ரூபாய் நோட்டு விவகாரத்தில் சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரூபாய் நோட்டு தடை - திட்டமிடல் பற்றி

சரியாக திட்டமிட்டிருக்க வேண்டும் - 87 %

சிரமங்கள் தவிர்க்க முடியாதது -11 %

கருத்து இல்லை - 2%

English summary
people did not support Demonetisation, says thanthi tv
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X