For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு விவகாரம்: போலீஸுக்கு ஆதரவாக, எதிராக மக்கள் கருத்து : ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக போலீஸ்க்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக போலீஸ்க்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணர்வர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை மெரினா, மதுரை தமுக்கம், அலங்காநல்லூர், கோவை ஆகிய நகரங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.

people have expressed their support and opposition on police: Rajeshwaran

போராட்டம் நிறைவு பெறும் நிலையில் போராட்டத்தில் ஈடபட்டவர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சென்னை மற்றும் கோவையில் விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த கமிஷன், இன்று முதல் மதுரையில் தங்கியிருந்து விசாரணை நடத்துகிறது. முன்னதாக இந்த கமிஷனின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இதுவரை ஐல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக 1951 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்னும் ஆறு மாதங்களில் இந்தப் பணி நிறைவுபெறும் என்றார். மேலும் போலீஸாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் மனு கருத்து தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

English summary
Retired Justice Rajeshwaran said that people have expressed their support and opposition on police for the attack on the Jallikattu protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X