For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உண்மையான 'பச்சோந்தி' யார் என மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது... ராதிகா சரத்குமார் குஷி டுவீட்!

மக்களுக்காக உழைக்கிறேன், ஊழலை ஒழிக்கிறேன் என்று சொன்னவரின் உண்மை நிறம் வெளிவந்துள்ளதாக நடிகை ராதிகா டுவீட்டியுள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : மக்களுக்காக பேசுகிறேன், ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று சொன்னவரின் மனு போலி கையெழுத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரின் உண்மையான நிறத்தை தெரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாக நடிகை ராதிகா கருத்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் சங்க விவகாரத்தில் கணவர் சரத்குமார், அண்ணன் பொதுச்செயலாளருக்கு எதிராககளமிறங்கினார் நடிகர் விஷால். நடிகர் சங்க கட்டிட விவகாரத்தில் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஊழல் செய்ததாக விஷால் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார், ராதாரவி தோல்வியடைய செய்து நடிகர் விஷால் பொதுச்செயலாளராகவும், நடிகர் நாசர் நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திரைப்படத் துறையில் அவர்கள் மீது இது மிகப்பெரிய கறையை ஏற்படுத்தியது.

ராதிகா மகிழ்ச்சி டுவீட்

நடிகர் சங்க விவகாரத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஆதரவாக அவரின் மனைவியும் நடிகையுமான ராதிகா பேசி வந்தார். இந்நிலையில் ஆர்கே நகர் தேர்தலில் போலி கையெழுத்து புகாரால் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ராதிகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இரண்டு கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

பச்சோந்தி யார்?

அதில் மக்களுக்காக உழைக்கிறேன், ஊழலுக்கு எதிராக சண்டையிடுகிறேன் என்பவரின் லட்சணம் இது தான். மக்கள் உண்மையான பச்சோந்தி யார் என்பதை தெரிந்து கொள்ளத் துவங்கியுள்ளனர் என்று ஒரு டுவீட்டில் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

ஊழலை எதிர்க்கிறேன் என்றார்

ஊழலை எதிர்க்கிறேன் என்றார்

மற்றொரு டுவீட்டில் ஸ்டார்ட், கேமரா ஆக்ஷன் இந்த வார்த்தையை கேட்பதற்கு முன்னரே சிலர் நன்றாக நடிக்கத் தொடங்கினர். மக்களுக்காக பேசுகிறேன், ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லி கடைசியில் போலி கையெழுத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளார். எல்லோரும் சிலரின் உண்மையான நிறம் என்ன என்பதை தெரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் என்று மற்றொரு டுவீட்டில் ராதிகா தெரிவித்துள்ளார்.

குஷி டுவீட்

குஷி டுவீட்

ராதிகா தன்னுடைய இரண்டு டுவீட்டிலுமே நடிகர் விஷாலின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் அவரை மறைமுகமமாக தாக்கும் விதமாகவும், குஷியோடும் இந்த டுவீட்டுகளை பதிவிட்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகிறது.

English summary
Start, camera action , before hearing these words some are excelling. To talk of pro people and anti corruption and get rejected for falsifying signatures. Everyone gets to see true colours Radikaa sarathkumar tweeted about vishal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X