For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"டிஜிட்டல் லாக்கர்" - ஆரம்பிக்க ஆர்வம் காட்டும் மக்கள்

Google Oneindia Tamil News

நெல்லை: சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்களை இணையதளம் மூலம் பாதுகாக்கும் வகையில் டிஜிட்டல் லாக்கர் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டு்ளளது. இதனை திறக்க பொதுமக்கள் பலரும் ஆர்வம் காடடி வருகின்றனர்.

மத்திய அரசு ஜூலை 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை டிஜிட்டல் இந்தியா வாரத்தை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் லாக்கர் என்ற முறையில் இணையதளத்தில் கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.

people rush to start Digital locker

இதற்காக நெல்லை மாவட்டதேசிய தகவல் மையம் சார்பில் நெல்லை இஎஸ்ஐ மருத்துவமனையில் டிஜிட்டல் லாக்கர் கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் சர்மா துவங்கி வைத்தார். இஎஸ்ஐ தினேஷ் குமார் முதல் டிஜிட்டல் லாக்கர் திறந்தார்.

இதுகுறித்து தேசிய தகவல் மைய அலுவலர் தேவராஜன், "ஆதார் எண் வைத்திருக்கும் அனைவரும் டிஜிட்டல் லாக்கர் கணக்குகளை தொடங்கலாம். ஒருவருக்கு 10 மெகா பைட் அளவில் இணையதளத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இணையதளத்தில் 5 லட்சத்து 50 ஆயிரம் லாக்கர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லாக்கர் வசதியை பெற விரும்புபவர்கள் ஆதார் எண் அல்லது செல்போன் எண்ணை பதிவு அல்லது கை ரேகை பதிவு முறையில் புதிய கணக்குகளை துவங்கலாம். அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக பதிவேற்றம் செய்து அதற்குரிய இணையதள குறியீட்டை பெற்று கொள்ளலாம்.

எதிர்காலத்தில் அரசு துறைகள், கல்லூரிகளில் நாம் பெற வேண்டிய சான்றிதழ்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையில் இணையம் மூலம் எளிதாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட உளளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் https://digitallocker.gov.in மேற்கொண்ட இணையதளம் மூலமும் லாக்கர் கணக்கு துவங்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
digital locker would famous between the people for safe their documents in Online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X