• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

திமுக ஆட்சியில் மகிழ்ச்சி என்ற வண்ணத்துப் பூச்சி அனைத்து இல்லங்களிலும் தவழும்: ஸ்டாலின் உறுதி

By Mayura Akilan
|

சென்னை: கல்விக் கட்டணக் கொள்ளை தடுத்து பள்ளிக் கல்வி முதல்கல்லூரி கல்வி வரை வரும் கட்டணசுமை குறைக்கப்படும். மகிழ்ச்சி என்ற வண்ணத்துப் பூச்சி அனைத்து இல்லங்களிலும் தவழ உறுதி செய்யப்படும் என்ற முழக்கத்தைஇன்றைக்கு உங்கள் கழகம் எடுத்துக்கொள்ளும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை தொடங்கிய ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்தார். இந்த பயணத்தின் நிறைவையொட்டி உறுதி முழக்க பேரணி பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் ஞாயிறன்று நடைபெற்றது.

லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உற்சாகமாக பேச ஆரம்பித்த ஸ்டாலின், அறிஞர் அண்ணா அவதரித்த பூமி. சீனப்பயணி யுவான்சுவாங் கால் பட்ட பூமி. புத்தர் கால் பட்ட பூமி. அத்தகைய பெருமைமிகு இந்த இடத்தில் நின்று அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவுக்கு கட்டும் வகையில் இந்த உறுதி முழக்க பேரணியில் நான் நிற்கிறேன் என்று கூறினார்

46 நாள் நமக்கு நாமே பயணம்

46 நாள் நமக்கு நாமே பயணம்

46 நாள் நமக்கு நாமே பயணத்தில் அதிமுக ஆட்சியில் சந்திக்கும் கொடுமைகளை விளக்கியவர்களின்பட்டியல் கோடிகளைத் தாண்டும். சாதனைகளைச் சொல்ல ஜெயலலிதா36 மணி நேரம் வேண்டும்என்றார். ஆனால் அவர் ஆட்சியில் நான்கேட்ட மக்கள் வேதனைகளைச் சொல்ல வருடங்கள் பல வேண்டும்.

ஜெ. பிறந்தநாள்

ஜெ. பிறந்தநாள்

வாக்களித்த அந்த மக்களை வஞ்சித்த ஜெயலலிதா ஆட்சிதான் தமிழகம் இப்படிஎல்லா துறையிலும் தாழ்ந்து போனதற்குகாரணம் முதலமைச்சரின் பிறந்த நாள்கொண்டாட்டம் அரசு பணத்தில் நடந்தது இதுதான் முதல் முறை!.

ஸ்டிக்கர் கலாச்சாரம்

ஸ்டிக்கர் கலாச்சாரம்

அதே போல் வெள்ள நிவாரணப்பொருட்களில் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியது இதுதான் முதல் முறை. ஏழைமணமகன், மணமகள் நெற்றியில் அம்மாஸ்டிக்கர் ஒட்டியது இதுதான் முதல்முறை. அண்டை மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் உள்ள நம்மாநிலத்தவர் தமிழகத்தில் நிலவும் போஸ்டர் கலாச்சாரம், "ஸ்டிக்கர்" கலாச்சாரத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிகிறார்கள்".

வெள்ளக்காடான தமிழகம்

வெள்ளக்காடான தமிழகம்

காஞ்சிபுரத்தையும், திருவள்ளூரையும், சென்னையையும்ஏன் வெள்ளக் காடாக்கினீர்கள் என்றுஅனைத்து தலைவர்களுக்கும்கேட்டதற்கு ஏன் அவர் பதில்சொல்லவில்லை? குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்குது என்று தானே அர்த்தம்.

ஆலைகள் மூடல்

ஆலைகள் மூடல்

தமிழர்களின் மடிந்த உணர்ச்சி கண்டு அவர் மகிழ்ச்சியில் இருக்கலாம். ஆனால்அவன் இலட்சியம் மடியவில்லை. இங்கு இருந்த "ஃபாக்ஸ்கான்" ஆலையை மூடி விட்டார். 5000 இளைஞர்கள் வேலை இழந்தார்கள். "நோக்கியா" தொழிற்சாலையை மூடிவிட்டார். 50 ஆயிரம் பேர் வேலைஇழந்தார்கள்."

அண்ணா நூலகம்

அண்ணா நூலகம்

அண்ணா பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு அண்ணாபெயரில் உள்ள நூலகத்தை சிதைத்துவிட்டார். சீரழித்து விட்டார். 'அச்சாணிஇல்லாத தேர் முச்சாணும் ஓடாது' என்பது போல் அதிமுக அரசு நடந்துகொண்டிருக்கிறது.

110 அறிவிப்புகள்

110 அறிவிப்புகள்

தேர்தல்அறிக்கையில் 53 வாக்குறுதிகள்கொடுத்தார். 50 வாக்குறுதிகள் இன்னும்நிறைவேற்றப்படவில்லை. 110-விதியின்கீழ் வெளியிட்ட 600-க்கும் மேற்பட்டஅறிவிப்புகளை வெளியிட்டார். 550 அறிவிப்புகள் 'கானல் நீராகவே' இருக்கின்றன. 23 ஆயிரத்து 140 மெகாவாட் தயாரிப்பேன் என்றுபந்தக்கால் போட்டார் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு ஒரு மெகாவாட்மின்சாரம் தயாரிக்கக் கூட ஒரு மின்திட்டத்தை அதிமுக ஆட்சி கொண்டுவரவில்லை.

ஒரே மேடையில் விவாதிப்பாரா?

ஒரே மேடையில் விவாதிப்பாரா?

98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றார். அவற்றில் 84 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் கதி என்ன? இதுவரைதெரியவில்லை. 110-விதியின் கீழும்அறிவித்துள்ள திட்டங்கள் எத்தனைநிறைவேற்றப்பட்டுள்ளது? எவ்வளவு நிதிஒதுக்கப்பட்டது? இது பற்றி ஒரேமேடையில் விவாதிக்க அம்மையார்ஜெயலலிதா தயாரா?

மக்களை சந்திக்காத முதல்வர்

மக்களை சந்திக்காத முதல்வர்

எங்கள் மாநிலத்தில் வந்து முதலீடுசெய்யுங்கள் என்று ஜெயலலிதா ஏதாவது ஒரு அண்டை மாநிலத்திற்குபோனாரா? முதலீட்டாளர்களை சந்தித்தாரா? இந்தியாவிலேயே தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில்தன் சொந்த மாநில மக்களை சந்திக்காத ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான். தன் தொகுதி மக்கள்பாதிக்கப்பட்ட போது கூட வேனில் இருந்தவாரே கையசைத்து விட்டு சென்ற ஒரே முதலமைச்சர் ஜெயலலிதா தான்.

தொழில் தொடங்க இடம்

தொழில் தொடங்க இடம்

உலக பொருளாதார அமைப்பு (World Economic Forum) ஒரு சர்வேஎடுத்தது. அந்த நிறுவனம், தொழில்தொடங்க சென்னை சரியான இடம் கிடையாது என்று டிக்ளேர் செய்துவிட்டது.

பின்னோக்கி செல்கிறது

பின்னோக்கி செல்கிறது

தமிழகம் விவசாயத்தில் 21 வது இடம், கல்வியில் 13 வது இடம், உள்கட்டமைப்பில் 17 வது இடம், ஒட்டுமொத்த வளர்ச்சியில் 20 வது இடம். இதுதான் அதிமுக ஆட்சியன் லட்சணம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில்செல்லவில்லை. அதிமுக ஆட்சியில்தளர்ச்சிப் பாதையில் பின்னோக்கிசென்று கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம்

அறிந்தறிந்து தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்கின்ற பாவத்தை அழுதழுதுதொலைக்க வேண்டிய நிலை வரும்என்று இந்த மேடையில் நின்று ஜெயலலிதாவை எச்சரிக்கவிரும்புகிறேன். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதற்கும், உங்கள் ஆட்சியில் நடக்கும் அனைத்து ஊழல்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும்!.

உறுதி முழக்கம்

உறுதி முழக்கம்

ஓரகடத்தில் 1400 கோடி செலவில் வாகன சோதனை ஆய்வு மையம் நிறுவப்பட்டது என திமுக ஆட்சியில் சாதனைகளை சொல்ல இங்கு நேரம் போதாது

இந்தியாவில் தமிழகத்தை முதன்மைமாநிலக்குவோம்- இது முதல் உறுதிமுழக்கம்.

அகில இந்திய அளவிலும், மற்றமாநிலங்களுடனும் போட்டி போடும்அளவிற்கு இளைஞர்களைஊக்குவிப்போம். அவர்களின் கல்விதரத்தை உயர்த்துவோம்.

லோக் ஆயுக்தா

லோக் ஆயுக்தா

கழகம் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஊழலை ஒழிக்க லோக் அயுக்தாஅமைக்கப்படும். அந்த அமைப்பு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரைவரும் ஊழல் புகார்களை விசாரிக்கும்அதிகாரம் படைத்ததாகஇருக்கும். சுதந்திரமிக்க அமைப்பாக திமுக ஆட்சியில் "லோக் ஆயுக்தா" இருக்கும்.

காவல்துறைக்கு சுதந்திரம்

காவல்துறைக்கு சுதந்திரம்

கலெக்ஷன், கரெப்ஷன், கமிஷன் இல்லாத ஆட்சியை கழகம் நிச்சயமாகவழங்கும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படும். இ-கவர்னஸ்க்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம்

நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம்

சேவையும், உரிமையும் சேர்த்துவழங்குவோம் என்று உறுதி முழக்கம் எடுப்போம். அதற்கு சேவை உரிமைசட்டம் கொண்டுவருவோம். தமிழகத்தை நிதிபற்றாக்குறை இல்லாத மாநிலமாகமாற்ற நாம் உறுதி முழக்கம்செய்வோம்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

தொழில் துறையை எழில்மிகு துறையாக ஏற்றம் பெறச் செய்வோம். வேலை இல்லாத் திண்டாட்டத்தை விரட்டி அடிப்போம்
வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வேலை கொடுக்கும்அலுவலகங்களாக மாற்றப்படும்.

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஆக்கிரமிப்பு அகற்றம்

ஏர் பிடித்து விவசாயம் செய்ய வேண்டியவிவசாயிகள் போர் பரணி பாடி நிற்கவைத்து விட்டது இந்த அரசு. நெசவுத் தொழிலும் வளரும்.நெசவாளர்கள் வாழ்க்கைத் தரமும்உயரும். குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்போம். ஆக்கிரமிப்புகளை தடுப்போம்.

கல்வி கட்டண சுமை

கல்வி கட்டண சுமை

கல்விக் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டு பள்ளிக் கல்வி முதல் கல்லூரி கல்வி வரை வரும் கட்டணசுமை குறைக்கப்படும்.

"மகிழ்ச்சி என்ற வண்ணத்துப் பூச்சி" அனைத்து இல்லங்களிலும் தவழ உறுதிசெய்யப்படும் என்ற முழக்கத்தை இன்றைக்கு திமுக எடுத்துக் கொள்ளும். தமிழகம் வளமும், வாழ்வாதாரமும் பெறும்!

லஞ்ச ஊழல்

லஞ்ச ஊழல்

ஊழலும் ஊதாரித்தனமும் விரட்டி அடிக்கப்படும். பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற ஜெயலலிதாவின் மண்கோட்டை இந்த முறை வாக்காளர்களால் தகர்க்கப்படும்.

தமிழகம் மாறும்

தமிழகம் மாறும்

வாக்களியுங்கள்- மாற்றத்திற்கு. மாற்றம்- உங்கள் வாழ்வு ஏற்றம்பெறுவதற்கு - நம் இளைஞர்களின்எதிர்காலம் மேம்படுவதற்கு. ஊழலற்ற, முன்னேற்றமிக்க மாநிலமாக தமிழ்நாடு மாறும் என்பதற்காக யாருடன் வேண்டுமானாலும் பந்தயம் கட்டத்தயாராக இருக்கிறேன்.

உறுதி முழக்கம்

உறுதி முழக்கம்

பொதுவாழ்வில் நேர்மை நாணயம் வேண்டும்-அந்தப் புது வாழ்வு, புகழ் வாழ்வு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும்- இதுவே எங்கள் இலட்சிய முழக்கம்- உரிமை முழக்கம் - உறுதி முழக்கம்

ஒற்றுமையுடன் பாடுபவோம், ஊரார் புகழ மாநில மக்களுக்காக உழைப்போம் என்று ஸ்டாலின் பேசினார்.

English summary
There will be no case in the DMK reign that a family collapsed because of the medical expenses.Cost burden for the education from the Kindergarden to the colleges will be reduced in our reign.We make sure that all the people of the state are happy in our ruling period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X