For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

120 அடி கொள்ளளவை எட்ட ததும்பும் மேட்டூர் அணை.. கடல் போல் காட்சியளிக்கும் அணையை பார்க்க மக்கள் ஆர்வம்

120 அடி கொள்ளளவை எட்ட ததும்புகிறது மேட்டூர் அணை.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மேட்டூர் அணையில் நிரம்பிவழியும் காவிரி கொண்டாட்டத்தில் மக்கள்.. வீடியோ

    சேலம்: மேட்டூர் அணையில் 120 அடி கொள்ளளவை எட்டுவதற்கு நீர் ததும்பி வரும் காட்சிகளை மக்கள் ரசித்த வண்ணம் உள்ளனர்.

    கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியதால் அங்குள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பின. இதையடுத்து கர்நாடகத்தின் கேஆர்எஸ் அணையிலிருந்து நீர் கபிணி அணைக்கு திறந்துவிடப்பட்டது.

    இதையடுத்து கபினியிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

    நீர் அதிகம்

    நீர் அதிகம்

    இது 39-ஆவது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூரில் நீர் நிரம்பியதை அடுத்து மதகுகள் வழியாக நீர் திறந்து விடப்படுகிறது. காலையில் பாசனத்துக்காக 30ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 40000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    மக்கள் அலை

    மக்கள் அலை

    மேட்டூர் அணை பார்ப்பதற்கு கடல் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதை காண்பதற்காக சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மக்கள் அலை அலையாக திரண்டு வருகின்றனர்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    தண்ணீர் அதிகவெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    விவசாயிகள் மகிழ்ச்சி

    விவசாயிகள் மகிழ்ச்சி

    5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். விவசாய அமைப்பினர் சாரை சாரையாக வந்து காவிரியை மலர் தூவி வரவேற்கின்றனர்.

    English summary
    Mettur dam has reached its FRL and people are thronging the dam site to witness the ocean like Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X