For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெப்ஸிகோ நிறுவன சிஇஓ பதவியிலிருந்து விலகினார் தமிழர் இந்திரா நூயி!

பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி இந்திரா நூயி தனது பொறுப்பில் இருந்து பதவி விலகி இருக்கிறார்.

இவர் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். பெப்ஸிகோ நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயலதிகாரி ஆவார் இந்திரா நூயி.

மிகவும் சிறப்பாக செயலாற்றி உலகப் புகழ்பெற்ற இவர் தற்போது தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

பெரிய நிறுவனமாக மாற்றினார்

பெரிய நிறுவனமாக மாற்றினார்

12 வருடமாக அவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்துள்ளார். அந்த நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான திட்டங்களையும், ஆலோசனைகளையும் வழங்கி மிக மோசமான நிலையில் இருந்த நிறுவனத்தை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றார்.

விலகினார்

விலகினார்

இந்த நிலையில் பெப்ஸிகோ நிறுவனத்தில் நடந்த உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய தலைமை செயலதிகாரி நியமிக்கப்பட்டார். தலைமை செயலதிகாரி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது பிரிவு நிகழ்விற்கு பெரிய விழா ஒன்று நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பணியாற்றுவார்

தொடர்ந்து பணியாற்றுவார்

அதே சமயம் அவர் தொடர்ந்து நிறுவனத்துடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி அவர் நிறுவனத்தின் கூட்டத்தலைவராக தொடர்ந்து செயல்படுவார். அடுத்த வருடம் இறுதி வரை அவர் இந்த பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய சிஇஓ

புதிய சிஇஓ

ராமன் லகூர்த்தா என்ற நபர் தற்போது பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்த துறையில் சிறந்த அனுபவம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PepsiCo's Indra Nooyi to step down as CEO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X