For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளனுக்கு சிறுநீரக நோய் தொற்று சிசிச்சை - சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்து வரும் பேரறிவாளன் சிறுநீரகத் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக இன்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், கடந்த சில மாதங்களாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

Perarivalan is hospitalized in chennai

இதனால் அவ்வப்போது வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

எனினும் அவருக்கு மேல் சிகிச்சை தேவை என அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். இதனால் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார்.

இதனை ஏற்ற சிறைத்துறை அலுவலகம், பேரறிவாளனை சென்னை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது.
அதனடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி வேலூரிலிருந்து சென்னை புழல்சிறைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு மீண்டும் சிறுநீரகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை அழைத்து வரப்பட்ட பேரறிவாளன், அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

English summary
Perarlivalan admitted for treatment in General Hospital of Rajiv Gandhi Government in Chennai today due to urinary infections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X