For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியார் ஜாதிக்கு எதிரானவர் என்று சொல்கிறார்கள்.. ஆனா இங்க பாருங்க.. வைரலாகும் கஸ்தூரி ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். எனவே, ரஜினி இந்த கருத்துக்கு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெரியார் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், பத்திரிகையில் வந்ததைதான் நான் கூறியுள்ளேன். அதனால் மன்னிப்புகேட்க முடியாது என்று ரஜினிகாந்த் தெரிவித்துவிட்டார்.

Periyarists are against only one caste, says Kasturi Shankar

இதனால் பெரியார் ஆதரவாளர்களும், ரஜினி ரசிகர்களும், மாறி, மாறி சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதல் தீக்கு நெய் ஊற்றியுள்ளார் நடிகை கஸ்தூரி.

"பெரியார் ஜாதிக்கு எதிரானவர் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் பார்த்தவரை பெரியாரிஸ்ட்கள் ஒரு ஜாதிக்கு மட்டும் தான் எதிரானவர் போல் தெரிகிறது" என்று டுவீட் செய்துள்ளார். இப்படி அவர் ட்வீட் செய்ய காரணம், அவர் ரஜினி வீட்டுக்கு அருகே போராடிய பெரியாரியவாதிகள் கைகளில் ஏந்தியுள்ள பதாகைகள்தான். அதில், ஒரு குறிப்பிட்ட ஜாதி தொடர்பான கருத்துக்கள் எழுதப்பட்டு, ரஜினியை விமர்சனம் செய்துள்ள வாசகங்களை பார்த்துவிட்டுதான், கஸ்தூரி இப்படி கொந்தளித்துள்ளார். அவர் எந்த ஜாதியை குறிப்பிடுகிறாரோ, அதே ஜாதியை சேர்ந்தவர் என கஸ்தூரியை நெட்டிசன்களில் சிலர் விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது.


நீங்கள் சொல்லும் ஒரு ஜாதிதான் மற்ற ஜாதிகளை ஒடுக்குகிறது, என்று இந்த நெட்டிசன், கஸ்தூரிக்கு கமெண்ட் போட்டுள்ளார்.


ஆமா.. யாரு ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களைத்தான். மொத்தமாக இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

அந்த 1 caste தான் உயர்ந்தது என்று நம்பவைக்கப்பார்கிறார்கள்..அதை எதிர்த்தவர் தான் பெரியார்.. இதை புரிந்து கொள்ள துக்ளக் வைத்துள்ளவர்களால் முடியாது. இப்படி சொல்லியுள்ளார் இந்த நெட்டிசன்.

English summary
They say Periyar was against caste. As far as I can see, Periyarists are against only ONE caste, says Kasturi Shankar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X