டிடிவி தினகரன் திருச்சி பொதுக்கூட்டத்திற்கு மீண்டும் அனுமதி மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி : நீட் தேர்வை எதிர்த்து செப்டர் 19ல் திருச்சி உழவர் சந்தையில் கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரிய டிடிவி தினகரனுக்கு இரண்டாவது முறையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். டிடிவி. தினகரனும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செப்டம்பர் 12ல் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தார்.

 Permission regretted second time for TTV. Dinakaran's protest at Trichy against NEET

ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் சென்னையில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்தார். இந்நிலையில் திருச்சி தென்னுார் உழவர் சந்தை மைதானத்தில், 16ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்படும்' என, தினகரன் அறிவித்திருந்தார். கூட்டத்திற்கு அனுமதி கேட்டு, தினகரன் அணியின் அமைப்புச் செயலர் மனோகரன், போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் கடிதம் கொடுத்தார்.

16ம் தேதி, உழவர் சந்தை மைதானத்தில், தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில், இரண்டு நாட்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளதால், கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் மீண்டும் செப்டம்பர் 19ல் கண்டன கூட்டம் நடத்த அனுமதி கோரி திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது முறையாக இன்றும் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dhinakaran called for a rally against the National Eligibility cum Entrance Test (NEET) in Trichy on September 19 again permission regretted by officials

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற