For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெருந்துறை சிப்காட் பேருந்தில் 'ஞாயிறுதோறும்' இந்தியில் பெயர்ப் பலகை - Exclusive

பெருந்துறை சிப்காட் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெருந்துறை: பெருந்துறை சிப்காட் பேருந்து நிலையத்தில் மார்க்கெட் செல்லும் பேருந்துக்கு ஞாயிறுதோறும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்படுகிறது.

பெருந்துறை மார்க்கெட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வார சந்தை நடத்தப்படுகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ளோர் பொருட்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் கூடுவது வழக்கம்.

 Perundurai Sipcot Market bus gets every sunday name board in Hindi

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் இருந்து பெருந்துறை மார்க்கெட்டுக்கு செல்லும் 17-ஆம் எண் பேருந்தில் ஞாயிறுதோறும் இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பெயர் பலகை வைக்கப்படுகிறது.

தமிழக அரசு பேருந்தில் இந்தியில் பெயர் பலகை எதற்கு என கேட்டபோது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகையில் பெருந்துறை சிப்காட் பகுதியானது முழுக்க முழுக்க வடமாநிலத்தவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது.

இவர்களுக்கு புரியும் வகையில் பேருந்தில் இந்தியில் பெயர் பலகை வைக்கப்படுகிறது. இன்னும் கொஞ்ச காலம் பொறுத்து பெருந்துறைக்கு செல்ல வேண்டுமானால் இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்கள் அதிகாரிகள்.

English summary
Perundurai Sipcot Market bus gets every Sunday name board in Hindi because of that area has more population of North Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X