For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக காங்கிரஸ் தலைவராக பீட்டர் அல்போன்சுக்கு வாய்ப்பு அதிகம்.. வாசனுக்கு செக்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் கட்சி மேலிட அதிருப்தியால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

இதையடுத்து தலைவர் பதவி போட்டியில், தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து சமீபத்தில் மீண்டும் காங்கிரசுக்கு வந்த, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், எச்.வசந்தகுமார், மாணிக்தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

Peter Alphonse may be announced as new chief for Tamilnadu Congress party

இதற்கிடையே ராகுல்காந்தி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பியுள்ளார். எனவே தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் இந்த வாரம் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பீட்டர் அல்போன்சை தலைவராக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவரை தலைவராக நியமித்தால் த.மா.கா.வில் இருந்து மேலும் பலர் காங்கிரஸ் கட்சிக்கு வரக்கூடும். வாசன் கட்சி முற்றாக உடையும் என்பது காங்கிரசின் திட்டம்.

மேலும் இளங்கோவன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 48 பேர் பீட்டர் அல்போன்ஸ் தலைவராக வரவே விரும்புகிறார்கள். எனவே பீட்டர் அல்போன்ஸ் தலைவராவது உறுதி என தெரிகிறது.

English summary
Peter Alphonse may be announced as new chief for Tamilnadu Congress party, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X