For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கருவாடு மடித்து தரப்பட்ட அவலம்.. மாற்றுத்திறனாளி அதிர்ச்சி

கடலூர் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளியின் மனுவில் கருவாடு மடித்து தரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    27 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிகையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம்-வீடியோ

    கடலூர்: ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளியின் மனுவில் கருவாடு மடித்து தரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மக்கள் குறைதீர்க்கும் நாள் திங்கள்தோறும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தின் போது பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    புவனகிரியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வேலைவாய்ப்பு கேட்டும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 27 முறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவாக கொடுத்துள்ளதாகவும் ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    அலட்சிய போக்கில் பதில்

    அலட்சிய போக்கில் பதில்

    சுட்டெரிக்கும் வெயில் என்றும் பாராமல் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறோம் என்ற மாற்றுத்திறனாளிகள் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை என்றும் அதிகாரிகள் அலட்சிய போக்கில் பதில் சொல்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினர்.

    ஆட்சியரிடம் மனு

    ஆட்சியரிடம் மனு

    இந்நிலையில் மற்றொரு மாற்றுத்திறனாளி மூன்று வருடத்திற்கு முன்பு தனது தந்தையார் பணியில் இருந்தபோது இறந்துவிட்டார் என்றும் அவரது பணியை தனக்கு வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வருவதாகவும் கூறினார்.

    கருவாடு மடித்து தரப்பட்ட மனு

    கருவாடு மடித்து தரப்பட்ட மனு

    சென்றவாரம் கருவாடு வாங்குவதற்காக மார்க்கெட்டுக்கு சென்றபோது ஒரு வருடத்திற்கு முன் மாவட்ட ஆட்சியரிடம் தரப்பட்ட தனது மனு கருவாட்டுக் கடையிலிருந்து கருவாடு மடிக்கப்பட்டு என்னிடம் தரப்பட்டது என்றும் வேதனையுடன் கூறினார்.

    பத்திரிக்கை ஆசிரியருக்கும்

    பத்திரிக்கை ஆசிரியருக்கும்

    இதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும் அந்த மாற்றுத்திறனாளி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிக்கு தான் இந்த நிலைமை என்றால் ஒரு பத்திரிகை ஆசிரியருக்கும் இதே நிலைத்தான்.

    இதுவரை கிடைக்கவில்லை

    இதுவரை கிடைக்கவில்லை

    20 ஆண்டுகளுக்கு முன் பணியின்போது தந்தையார் இறந்துவிட்டார் அவரது பணியைத் கேட்டு தொடர்ந்து இருபது ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து முறையாக மனு அளித்தும் வாரிசு வேலையும் இதுவரை கிடைக்கவில்லையாம்.

    கண்டுகொள்ளுமா தமிழக அரசு

    கண்டுகொள்ளுமா தமிழக அரசு

    அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் தொடர்ந்து இதுபோல் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகத்தான் உள்ளது. இனியாவது கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

    English summary
    Petitions which is given to Cuddalore Collector by physically challenged person used to fold Dry fish in Market.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X