For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாமுக்கு அஞ்சலி.. தமிழகத்தில் நாளை ஒரு மணி நேரம் பெட்ரோல் பங்குகள் மூடல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: 'மக்களின் ஜனாதிபதி' அப்துல் கலாம் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக, நாளை காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டும் என்று தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார்.

இதேபோல, தமிழகத்தில் மாலை 6 மணிவரை திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என்று திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

Petrol bunks in Tamilnadu will remain closed from 10 am to 11 am on Thursday

மறைந்த, மக்களின் ஜனாதிபதி, அப்துல் கலாமின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழக அரசு, நாளை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனிடையே, வணிகர் சங்கங்கள், நாளை ஒருநாள் கடையடைப்பு செய்கின்றன.

இதேபோல, பெட்ரோல் பங்குகள் நாளை காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரம், மூடப்பட்டிருக்கும் என்று தமிழக பெட்ரோல் விற்பனையாளர் சங்க தலைவர் முரளி அறிவித்துள்ளார்.

திரையரங்குகள் காலை முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருக்கும் என்று திரையரங்கு உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

English summary
Petrol bunks in Tamilnadu will remain closed from 10 am to 11 am on Thursday as Kalam's final rituals will take place on that day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X