For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று நள்ளிரவு முதல் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் போட முடியாது: பங்க் உரிமையாளர்கள் தந்த ஷாக்!

பெட்ரோல் பங்க்கள் நள்ளிரவு முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த அதிரடி அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் பங்க்குகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் இந்த திடீர் அறிவிப்பு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோடியின் ரூபாய் மதிப்பு ரத்து நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் பெரும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் பல மணி நேரம் காத்துக் கிடந்த பணம் எடுக்க வேண்டியுள்ளது. ஏடிஎம் மையங்கள் பெரும்பாலும் செத்துக் கிடக்கின்றன.

Petrol Bunks will not accept debit and credit cards from today night

இதனால் மக்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள். இப்படி நாலா பக்கமும் மக்களை நெருக்கடிகளும், கஷ்டங்களும் சுற்றி வளைத்துள்ள நிலையில் தலையில் ஒரு இடியை இறக்கியுள்ளது தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்.

இன்று நள்ளிரவு முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். வங்கிகள் கார்டு பணப்பரிமாற்றத்துக்கு 1% வரி விதிப்பதாக அறிவித்துள்ளன. பல வங்கிகள் இதை அறிவித்து தவிட்டன. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் முகவர்களுக்கு இழப்பு ஏற்படும்.

கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதால் வங்கிகளில் இருந்து பணம் தாமதமாக கிடைக்கிறது. எனவே கார்டுகளை வாங்குவதை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளன.

இந்த அறிவிப்பு மக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது மிகப் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் மத்திய அரசு உடனடியாக தலையிடகோரிக்கைகள் எழுந்துள்ளன.

English summary
Petrol Bunks will not accept debit and credit cards from today night. Petrol Bunks charging 1% tax for petrol bunks card transaction. Petrol bunk owners says that could not accept the loss/
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X