For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு.. டீசல் விலையும் உயர்வு!

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. லிட்டருக்கு ரூ.2.52 உயர்ந்துள்ளது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.97க்கு விற்பனையாகிறது. டீசர் விலை ரூ.69.81 ஆக விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் அன்றாட விலை நிலவரம் மற்றம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் டீசல் விலையை இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.

அதன்பிறகு சரிவு

அதன்பிறகு சரிவு

கடந்த ஆண்டு அக்டோபரில் பெட்ரோல் விலை ரூ.87ஆக உயர்ந்து உச்ச பட்சமாக இருந்தது. ஆனால் அதன் பிறகு படிப்படியாக குறைந்து 75 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்தது.

2.52 பைசா உயர்வு

2.52 பைசா உயர்வு

கடந்த மாதம் முன்பு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய் 52 பைசாவாக இருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77 ரூபாய் 97 பைசாவாக உயர்ந்துள்ளது. அதாவது 78 ரூபாயை நெருங்கி உள்ளது. மதுரையில் ரூ.78. 57 ஆகவும், சேலத்தில் ரூ.78.39 ஆகவும் விற்பனையாகிறது.

அதிரடியாக உயர்வு

அதிரடியாக உயர்வு

பெட்ரோல் மட்டுல்ல டீசல் விலையும் 70 ரூபாயை தாண்டி உள்ளது. .சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 69.81 ஆகவும், மதுரையில் ரூ.70. 40 ஆகவும், சேலத்தில் ரூ.70.23 ஆகவும் விற்பனையானது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியால் நடந்த தாக்குதல் காரணமாக 2 வாரங்களிலேயே பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்ந்தது. அதன்பிறகு விலை குறைந்தாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு காரணமாக மீண்டும் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

English summary
petrol price hike Rs 2.52 with in month, today petro price in chennai rs.77.97
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X