For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு.. ஒரு லிட்டர் 86 ரூபாயை தாண்டியது.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு காணப்பட்டு வருகிறது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஒன்றும் ஆகவில்லை

ஒன்றும் ஆகவில்லை

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அத்தியாவசியப் பொருட்கள்

அத்தியாவசியப் பொருட்கள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.

வரலாறு காணாத உயர்வு

வரலாறு காணாத உயர்வு

இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 86 ரூபாயை தாண்டியுள்ளது.

பெட்ரோல் விலை ரூ.86.13 காசுகள்

பெட்ரோல் விலை ரூ.86.13 காசுகள்

பெட்ரோல் விலையில்14 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.86.13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து, ரூ.78.36 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

English summary
Petrol price hicked today also: One litter crossed Rs 86.13.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X