For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய உச்சத்தை தொட்டது- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ77.19

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவின் இந்த 4 கால ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளதால் நாட்டுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையை கடந்த மாதம் முதல் கைவிடப்பட்டது. பெட்ரோல், டீசலின் அன்றாட விலையை பொதுத்துறை நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

 Petrol price hit highest level under BJP govt

இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக வருவதால், கடந்த வாரம் வரை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 74.40 ஆக உயர்த்தியுள்ளதுடன், டீசல் விலையையும் லிட்டருக்கு ரூ.65.65 ஆகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய நாள் விலையைக் காட்டிலும் தலா 19 காசுகள் உயர்வாகும்.

கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.10 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டுக்குப் தற்போது இங்கு இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. அதேபோல, கடந்த 2014-ம் ஆண்டுக்குபின் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.82.25 காசுகளாக இன்று விற்கப்படுகிறது.

இதே போல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 77.19 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ 69.27 ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சராசரியாக பெட்ரோல் லிட்டருக்கு 37 காசுகள் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 20-ந்தேதியில் இருந்து இன்று வரை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 34 காசுகளும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு 37 காசுகளும் அதிகரித்துள்ளது. 6 வருடங்களுக்கு பின்னர் சென்னையில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலைபடுவீழ்ச்சி அடைந்தது. அதற்கான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதனை நிராகரித்துவிட்டார். இதில், கடந்த 2014 நவம்பர் மற்றும் ஜனவரி 2016-வரை பெட்ரோல், டீசல்விலையை குறைக்காமல், உற்பத்தி வரியையும் அவர் 9 முறை உயர்த்திவிட்டார். மக்களின் சிரமம் கருதியும், பணவீக்கம், விலைவாசி உயராமல் இருக்க உடனடியாக உற்பத்தி, கலால்வாரி உயர்வைக் குறைக்க வேண்டி மத்திய அரசுக்கு கடும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The public has been deeply dissatisfied because petrol diesel prices have skyrocketed during the 4-year rule of the BJP. Petrol price hike in Delhi Diesel prices have risen to Rs 74.40 and Rs 65.65 per liter. Petrol price in Chennai rose to Rs 77.19 per liter, while diesel prices rose by Rs 69.27 per liter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X