For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெல்லாம் நம்புறதா வேண்டாமா.. 2 வாரங்களில் லிட்டருக்கு 2 ரூபாய்க்கும் மேல் குறைந்த பெட்ரோல் விலை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைப்பு- வீடியோ

    சென்னை: கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைந்துள்ளது, மக்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, மேலும் 8 பைசா சரிந்துள்ளது. இதன் மூலம், கடந்த இரு வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.16 குறைந்துள்ளது. அதேநேரம், டீசல் விலை கடந்த 7 நாட்களாக எந்தவிதமாற்றமும் இன்றி அப்படியே தொடருகிறது.

    Petrol prices down by Rs 2 in over two weeks

    இன்றைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.76.27, சென்னையில் ரூ.79.16, மும்பையில் ரூ.84.06, கொல்கத்தாவில் ரூ.78.94 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    மே 29ம் தேதி வரலாற்றிலேயே அதிக அளவாக டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.43 என்ற விலைக்கும், டீசல் லிட்டருக்கு ரூ.69.31 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரித்தது.

    இருப்பினும் வரிகளை அரசு குறைக்கவில்லை. தற்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 மற்றும் டீசல் மீது ரூ.15.33 என்ற அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது. இவ்வாண்டு ஜனவரி 1ம் தேதி முதல், முன்பைவிட, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.46, டீசல் விலை ரூ.8.21 என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது.

    இன்றைய நிலவரப்படி, டீசல் விலை மாற்றம் ஏதுமின்றி டெல்லியில் ரூ.67.78, சென்னையில் ரூ.71.54, மும்பையில் ரூ.72.13, கொல்கத்தாவில் ரூ.70.33 என்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    English summary
    In a fortnight, the petrol prices have dipped by Rs 2.16 per litre. On Tuesday, petrol prices came down by 8 paise a litre. Diesel, on the other hand, remained unchanged for seventh day in a row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X