For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு!!

ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று மருந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆன்-லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க மத்திய அரசு கடந்த மாதம் வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு மருந்து வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Pharmacies closed throughout Tamil Nadu against online pharmacy business

ஆன்-லைன் மருந்து விற்பனை பொதுமக்களுக்கு ஆரோக்கியமற்றது என்றும் டாக்டரின் பரிந்துரையில் மட்டுமே விற்கவேண்டிய மருந்துகள் தவறான பயன்பாட்டால் நமது சமுதாயத்தை சீரழித்துவிடும் என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்-லைன் மருந்துகளின் ஆதிக்கம் அதிகமானால் கிராமப்புறம் மற்றும் சிறிய நகரங்களில் உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும் என்றும் மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்-லைன் மருந்து வணிகம் நடைமுறைக்கு வந்தால், மருந்து கடை தொழிலையே நம்பி இருக்கும் 8 லட்சம் பேர் நேரடியாகவும், 40 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும், அவர்களுடைய குடும்பத்தினரும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ள மருந்து வணிகர்கள் ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

English summary
Pharmacies have been closed throughout Tamil Nadu against online pharmacy business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X