For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்த மாணவர், சக மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு சில தினங்கள் முன்பு சட்ட விதிகளில் திருத்தம் செய்தது. இதை வலதுசாரி அமைப்பினர் வரவேற்கும் நிலையில், இடதுசாரி அமைப்பினரும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டவர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள். தங்களது உணவு உரிமையில் மத்திய அரசு தலையிட்டது ஜனநாயகம் கிடையாது என்பது அவர்கள் குற்றச்சாட்டு.

PhD Scholar of IIT-Madras attacked by a gang of students for attending a Beef Fest

மத்திய அரசு, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கிறது என்பது அரசியல்பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.

தங்கள் உரிமையில் மத்திய அரசு தலையிட்டதை கண்டித்து, சென்னை ஐஐடியில் மாணவர்கள் சுமார் 80 பேர் மாட்டிறைச்சியையும், பிரெட்டையும் சாப்பிட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த மாட்டிறைச்சி விருந்தை, எந்த அமைப்பையும் சேராத முற்போக்கு மாணவர்கள் சிலர் கூடி நடத்தியுள்ளனர்.

மாட்டிறைச்சி விருந்து நடைபெற்ற போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன. ஐஐடியில் பிஹெச்டி படிக்கும் மாணவர் சூரஜ் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், ஐஐடியிலுள்ள வலதுசாரி மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து, மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த சூரஜை சூழ்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவரது வலது கண்ணில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

கண்பார்வை பறிபோகுமா, திரும்புமா என தெரியாமல் அவரது நண்பர்கள் கவலையில் உள்ளனர். சூரஜ்ஜுடன் மேலும் ஒரு நண்பர் மட்டுமே அமர்ந்து சாப்பிட்ட நேரமாக பார்த்து இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளதாக அவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

English summary
Sooraj R, a PhD Scholar of IIT-Madras attacked by a gang of students for attending a Beef Fest organised in the campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X