For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண்

தேடப்பட்டு வந்த பி.எச்.டி மாணவர் கருப்பசாமி இன்று சரணடைந்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண்

    மதுரை: நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார்,.

    கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்ததாக நடைபெற்று வரும் பேராசிரியை நிர்மலா விவகாரம் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    Phd.Student Karuppasamy Surrender in Madurai court

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கல்லூரி வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்த முருகனை சிபிசிஐடி அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

    முருகனிடம் 9 பேர் கொண்ட குழுவினர் 22 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில், நிர்மலாதேவிக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கருப்பசாமி இன்று காலை சரண் அடைந்துள்ளார். அவருக்கு 27-ந் தேதி வரை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    English summary
    The police were searching for Professor Murugan and Research student Karuppasamy for helping Nirmaladevi as a professor who invited college students to the wrong path. In this case, Karuappasamy reached the Madurai District Court of Judicial Magistrate today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X