For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆயிட்டேன்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: எப்படியிருந்த நான் இப்படியாகிவிட்டேன் என்று கூறுமளவுக்கு, எப்படி பெரிய சைசில் இருந்த தொலைபேசி இப்போது உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது என்பதை காண்பிக்கிறது இந்த படம்.

20 வருடங்கள் முன்பெல்லாம் தொலைபேசி வைத்திருந்தால் அவர்தான் ஊரிலேயே பெரிய பண்ணையார் என்று மதிக்கத்தக்க அளவுக்கு இருப்பார். ஊரில் யாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமானாலும் அந்த நபர் வீட்டுக்குதான் போன் வரும்.

Phone size getting small

பிறகு செல்போன்கள் வருகை தந்தன. ஆனால் சிவப்பும், பச்சையும் மட்டுமே கொண்ட பட்டன்களுடன், செங்கல் சைசில் அவை இருந்தன. அதிலும் கலர் கிடையாது, பிளாக்&ஒயிட்டுதான். அதன்பிறகு கலர் டிஸ்பிளே கொண்ட செல்போன்கள் வந்தன.

பின்னர் அதில் 2ஜி இன்டர்நெட் சேவை புகுத்தப்பட்டது. இணையம் புகுந்த பிறகு நிலைமை படுவேகமாக முன்னேறியது. 3ஜி, 4ஜி என இணைய வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, கையடக்க கம்ப்யூட்டராகவே மாறியது செல்போன். இன்று ஸ்மார்ட் போன் இல்லாத மனிதர்களை மதிக்காத உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம். இதைத்தான் இந்த படம் காண்பிக்கிறது.

English summary
The communication era changed phone size in to small.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X