For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இவ்வளவுதான் வாழ்க்கை.. கண் கலங்காமல் இந்த போட்டோவை பாருங்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்களை குளமாக்கிவிடும் சக்தி பெற்ற படம்

    சென்னை: சில படங்கள் பார்த்ததுமே கண்களை குளமாக்கிவிடும் சக்தி பெற்றவை. இந்த படமும் அப்படியான ஒன்றுதான்.

    ஆனால், இது மனதை விட்டு அகலாமல் நிழலாட காரணம், அன்னமிட்டும் கைகள், சாப்பாட்டுக்காக சாலையில் தட்டு ஏந்தி நிற்பதுதான். ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்கள் பெரு நகரங்களில் பெருகியுள்ளன.

    இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படை கல்வி தகுதி இருந்தால் போதும் என்பதால், ஏழை, நடுத்தர இளைஞர்களுக்கு சிறிது வருவாய் தரும் வேலை வாய்ப்பாகவும் இது உருவாகியுள்ளது.

    அடைமழையிலும்

    அடைமழையிலும்

    ஆனால், வெயிலிலும், மழையிலும் இவர்கள்படும் பாடுதான் கல் நெஞ்சையும் கரைக்கும். அடை மழை வெளுக்கும்போதுதான் நமக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் ரெஸ்டாரண்ட்டுக்கு நனைந்தபடி செல்லவும் கஷ்டமாக இருக்கும். அப்போதுதான் இந்த ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் பறக்கும்.

    கஷ்டமான வேலை

    கஷ்டமான வேலை

    ஆனால் அது புயலோ, அடை மழையோ, ஆன்லைன் உணவு வினியோக ஊழியர்களுக்கு அது ஏதும் கிடையாது. மழையில் நனைந்தபடியே, டிராபிக் வாகனங்களுக்கு நடுவே நெளிந்தபடியே, அவர்கள் பறப்பார்கள்.

    ரோட்டோர கடைகளில்

    உரிய நேரத்திற்குள் உணவு வினியோகிக்கப்பட வேண்டும் என்ற இக்கட்டுக்கு நடுவே இவர்கள் எதிர்கொள்ளும் இடர்கள் ஏராளம். ஆனால், இப்படி பசித்த வயிற்றுக்கு சோறூட்டும் இவர்கள், அதே ஆன்லைன் உணவு விற்பனை ரெஸ்டாரண்டுகளில் சாப்பிட முடியுமா என்றால் முடியாது. கிடைக்கும் ஊதியமும் குடும்பத் தேவைகளுக்கே செலவாவதால், இவர்களில் பலர் சாப்பிடுவது என்னவோ, ரோட்டோர கடைகளில்தான்.

    ஏற்றத்தாழ்வான சமூகம்

    அப்படியான ஒரு படம்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலை கட்டினாலும், அந்த கட்டிட தொழிலாளி சாலையோரத்தில்தான் படுத்து உறங்கும் சமூகத்தில்தானே நாம் வாழ்கிறோம். இதுவும் அப்படியான ஒரு ஏற்றத்தாழ்வை முகத்தில் அறையும் படம்தான்.

    English summary
    A photo of online food delivery boys eating, in a roadside, eatery going viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X