For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓட்டு எந்திரங்களில் இனி வேட்பாளர்களின் படங்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நடைபெற சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தபால் வாக்கு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் வாக்குச்சீட்டில் சின்னம், வேட்பாளர் பெயருடன் இம்முறை வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.

ஒரே பெயர் கொண்ட பலர் போட்டியிடும் போது வாக்காளர்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

Photos of candidates in EVM mechines : CEC

தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் ஒரே பெயர் கொண்ட பலர் போட்டியிடுவதால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க வேட்பாளர்களின் புகைப்படத்தை அச்சிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கட்சியின் சின்னம் மட்டும் அல்லாமல், அந்தந்த கட்சி வேட்பாளர்களின் புகைப்படங்களும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றிருக்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பேலட் யூனிட், தபால் வாக்குப்படிவம், வாக்குச்சாவடிகளின் வெளிப்பகுதியில் ஒட்டப்படும் வேட்பாளர் பட்டியல் ஆகியவற்றில் இதுவரை வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியன இடம் பெற்றிருக்கும். இந்த சட்டசபை தேர்தலில் கூடுதலாக வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

வேட்புமனு தாக்கல் செய்யும்போது, இதற்கான புகைப்படம் சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் பெறப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் போது புகைப்படம் தரவில்லை என்ற காரணத்திற்காக வேட்புமனு தள்ளுபடி செய்யப்படாது என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

English summary
Chief election commissioner Nasim Zaidi said,Photos of candidates to remove confusion in minds of voters about candidate identities
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X