For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, கேசி பழனிச்சாமி போட்டியிட தடை கோரி ஹைகோர்ட்டில் திடீர் வழக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் திமுகவின் கேசி பழனிச்சாமி போட்டியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார். அதில் கடந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு செந்தில் பாலாஜியும் கேசி பழனிச்சாமியும் பணம் கொடுத்தனர்.

PIL seeks ban for Senthil Balaji, KC Palanisamy to contest in Aravakurichi

இதனால் தற்போது அதிமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி, ஏற்கனவே திமுக வேட்பாளரான கேசி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில்தான் செந்தில்பாலாஜி மற்றும் கேசி பழனிச்சாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் கேசி பழனிச்சாமி தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனக் கூறி வந்தார்.

இந்த நிலையில் திடீரென அரவக்குறிச்சி வாக்காளர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A PIL has been filed in the Madras High Court seeking ban for ADMK Candidate Senthil Balaji, DMK's KC Palanisamy in Aravakurchi constituency. Few Days agao TN Chief Electoral officer Rajesh Lakhoni has said that there is no ban for Senthil Balaji, KC Palanichamy to contest in elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X