For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்ட எதிர்ப்பு... பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் மாதம் மறைந்தார். அவரது உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.

Plea against Jayalalitha for constructing memorial building for her

இதனால் அவரது பெயரில் உள்ள நலத்திட்டங்களுக்கும், அரசு அலுவலகங்கள், பாடப்புத்தகங்களில் அவரது உருவப்படம் இடம்பெற்றுள்ளதற்கும் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு அரசு செலவில் , பொது இடத்தில் நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று எதிர்க்கட்சிகளும், கட்சி சாராதவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் துரைசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

English summary
An advocate Duraisamy filed a plea against to build memorial monument for Former CM Jayalalitha who was in connection with da case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X