For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓர் உயிர் காக்க கொஞ்சம் உமிழ்நீர் கேட்கிறார்கள்!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: ரத்த புற்றுநோயுடன் போராடும் ராஜீ என்ற பெண்ணுக்கு ஸ்டெம் செல்கள் தானம் தேவைப்படுகிறது.

11 வயதில் இருந்து ரத்த புற்றுநோயுடன் போராடி வருபவர் ராஜீ. 33 வயதே ஆன ராஜீக்கு புற்றுநோய் இருந்தாலும் அதை அவர் யாரிடமும் கூறுவது இல்லை. மிகவும் உற்சாகமாக காணப்படும் அவருக்கு புற்றுநோய் உள்ளது என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஓர் உயிர் காக்க கொஞ்சம் உமிழ்நீர் கேட்கிறார்கள்!

அந்த அளவுக்கு தனது கஷ்டங்களை எல்லாம் மறைத்து வாழக் கற்றுக் கொண்டுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்க்கை போராட்டம் நடத்தி வரும் ராஜீக்கு ஸ்டெம் செல் தானம் தேவைப்படுகிறது.

ராஜீக்கு உதவ விரும்புபவர்கள் உங்களின் ஸ்டெம் செல்லை தானம் செய்யலாம். உங்களின் ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல் எடுக்கப்படும்.

எந்த வகையில் தானம் செய்ய நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த முறைப்படி தான் தானம் பெறப்படும். உங்களின் ஸ்டெம் செல் ராஜீக்கு பொருந்துமா என்பதை கண்டுபிடிக்க உங்களின் உமிழ்நீரை பரிசோதனை செய்ய வேண்டும்.

ஸ்டெம் செல் தானம் செய்ய விரும்புவோர் (18 முதல் 50 வயதுக்குள் வரையுள்ளவர்கள்) உங்களின் உமிழ் நீரை சோதனைக்காக கொடுக்க வேண்டிய இடங்களின் விபரம் வருமாறு,

பிப்ரவரி 4ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை,
தேனாம்பேட்டை, சென்னை

பிப்ரவரி 5ம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை

கிஃப்ட் எ லைஃப்,
டைசெல் பயோ பார்க்,
தரமணி, சென்னை

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

தாத்ரி பிளட் ஸ்டெம் செல் டோனார்ஸ் ரெஜிஸ்ட்ரி,
12வது தளம், டைசெல் பயோ பார்க்,
தரமணி, சென்னை.

மேலும் விபரங்களுக்கு, +91 7338854570 அல்லது +91 4422541283 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஒரு இளம்பெண்ணின் உயிர் காக்க உதவுங்களேன்...

English summary
Kind hearted people are requested to donate their stem cell to 33-year-old Rajee who is fighting against chronic myeloid leukaemia (CML).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X