For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்லவேளை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இப்போ இல்லை.. நித்தியானந்தாவின் இந்த பார்முலாவை பாருங்க!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐன்ஸ்ட்டின் தியரி கூட போட்டி போடும் நித்தியானந்தா

    சென்னை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை தவறு என்று சாமியார் நித்தியானந்தா கூறிய வீடியோ வைரலாகி உள்ளது.

    தற்போது இந்தியாவில் இருக்கும் சாமியார்கள் இளைஞர்களை கவர நிறைய விஷயங்கள் செய்கிறார்கள். பைக் ஓட்டுவது, டான்ஸ் ஆடுவது, கிரிக்கெட் விளையாடுவது என்று நிறைய விஷயம் செய்கிறார்கள்.

    அறிவியல் குறித்து பேசுவதும் இதில் முக்கியமான ஒன்று. இந்த நிலையில் பிரபல சாமியார் நித்தியானந்தா ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சூத்திரம் ஒன்றை பற்றி வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளார்.

    பார்முலா

    பார்முலா

    உலகின் மிக முக்கியமான சூத்திரங்களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் e=mc^2 விதியும் ஒன்று. உலகின் பல கண்டுபிடிப்புகள் இதை மையமாக வைத்துதான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பொருளொன்றின் நிறை அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் சமன்பாடு ஆகும் இது.

    சைன்டிஸ்ட் நித்யானந்தா

    இந்த நிலையில் இந்த சமன்பாடு தவறு என்று நிரூபித்து இருக்கிறார் (அட நம்புங்க பாஸ்) நித்யானந்தா. ஆம், இதற்கு அவர் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதன்படி ஆற்றலும், நிறையும் எப்போதும் ஒன்றாக முடியாது, ஒன்றை மற்றொன்று சார்ந்து இருக்காது என்று விளக்கி உள்ளார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.

    விளக்கம் அளித்துள்ளார்

    விளக்கம் அளித்துள்ளார்

    அதோடு நிற்காமல் இந்த ஆற்றலையும், நிறையையும் அசைவம் சாப்பிடும் மோசமான மூளை கொண்ட நபரால் ஒன்றாக கொண்டிருக்க முடியாது. ஆனால் சைவம் சாப்பிடும் நபரின் மூளை இது இரண்டையும் ஒன்றாக கொண்டு இருக்கும் என்று விளக்கம் அளித்து, கடைசியில் எதையோ சொல்லி, என்னமோ பேசி, எப்படியோ வீடியோவை முடித்து குழப்பி இருக்கிறார்.

    பெரிய சர்ச்சை

    பெரிய சர்ச்சை

    இந்த வீடியோ பெரிய சர்ச்சை ஆகியுள்ளது. இவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று பலரும் கேட்டு இருக்கிறார்கள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விதிக்கும் ஆத்தூரில் பிரியாணி சாப்பிடும் நபருக்கும் என்ன சம்பந்தம் பாஸ் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். நேற்று பேஸ்புக், டிவிட்டர் முழுக்க இந்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Please trust, Nithyananda just broke the Albert Einstein's equation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X