For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

16 வயதில் காதல் தோல்வி.. குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்து அதிர வைத்த கோவை மாணவி!

Google Oneindia Tamil News

கோவை: கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவி ஒருவர் குடிபோதையில் பொது மக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த 16 வயதான பிளஸ் 2 மாணவி ஒருவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இவரது ஆண் நண்பருடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

plus 2 girl drunk and dispute in Coimbatore

இந்த நிலையில் நேற்று காலை பள்ளிக்கு கிளம்புவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சீருடையில் பள்ளிக்கு கிளம்பினார்.இருந்த போதிலும் அப்பெண்ணுக்கு காதல் தோல்வியால் பள்ளி செல்ல பிடிக்கவில்லை. இதையடுத்து காதல் தோல்வியை சக தோழிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்.

தனது செல்போனை எடுத்து தோழிகள் 3 பேருக்கு அழைப்பு விடுத்தார். தோழிகளும் அவர் அழைத்த பீளமேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்துக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு அப்பெண் மது விருந்து கொடுத்தார். பின்னர் அப்பெண்ணும், அவரது தோழிகளும் அங்கேயே பொழுதை கழித்தனர். தொடர்ந்து மாலையில் மீண்டும் மது அருந்தினர்.

தோழிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதால் மதுவாடை வெளியே தெரியாத அளவுக்கு அளவாக குடித்தனர். ஆனால் காதல் தோல்வியில் இருந்த அம்மாணவியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் அம்மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தோழிகளிடமே தகராறில் ஈடுபட்டார். இதனால் வணிக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தோழிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்தபடி இருந்தனர். நேரம் செல்ல செல்ல அப்பெண்ணின் தொல்லை அதிகரிக்கத் தொடங்கியது.

அவரது தோழிகளில் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு போன் செய்து மாணவியின் ரகளை குறித்து விளக்கமாக கூறினார். இதைத் தொடர்ந்து அந்த மாணவர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்துக்கு வந்தார். அங்கு போதையில் இருந்த அவரை மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறினார்.

ஆனால் அப்பெண்ணோ அந்த வாலிபரை ஆபாசமாக திட்டி மோட்டார் சைக்கிளில் ஏற மறுத்தார். இதையடுத்து தோழிகள் 3 பேரும் சேர்ந்து மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றினர். பின்னர் அந்த மாணவர் அப்பெண்ணை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதற்காக பீளமேட்டில் இருந்து குறுக்கு பாதையில் துடியலூர் நோக்கி சென்றார்.

மோட்டார் சைக்கிளில் செல்லும்போது அப்பெண் போதையில் பாட்டுப் பாடியபடி ரகளை செய்து கொண்டே வந்துள்ளார். சேரன் நகர் தாண்டி துடியலூர் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவர் ரோட்டில் தவறி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த மாணவர் மோட்டார் சைக்கிளை ரோட்டோரத்தில் நிறுத்திவிட்டு அவரை எழுப்ப முயன்றார். அந்த மாணவரை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிய அம்மாணவி போதையில் தகாத வார்த்தைகளால் வசை பாட தொடங்கினார்.

நடுரோட்டில் போக்குவரத்து மிகுந்த பகுதியில் பள்ளி சீருடையில் மாணவி ஒருவருடன் மாணவர் மல்லுகட்டுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவி அருகே சென்று பார்த்த போது தான் அவர்களுக்கு மாணவி போதையில் இருப்பது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவியை மீட்க முயன்றனர். அவரோ பொதுமக்களையும் காலால் எட்டி உதைத்து ரோட்டில் வட்டமடித்தார். பின்னர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறி, மாறி ஆபாசம் கலந்த தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார்.

தகவலறிந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் அங்கு குவிந்தனர். அப்பெண்ணோ ஒருவரையும் விடாமால் வளைத்து, வளைத்து திட்டிக் கொண்டிருந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்ததும் துடியலூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் பெண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.மாணவியின் நிலை கண்டு பதறிய போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். ஆனால் மாணவியோ போலீசாரை கூட அடையாளம் தெரியாமல் போதையில் இருந்தார்.

போதையில் இருந்த மகளின் நிலையை கண்டு அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். போலீசார் அப்பெண்ணுக்கு அறிவுரைகள் கூறி அவரது நலன் கருதி வழக்கு ஏதும் போடாமல் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 முறை மதுஅருந்தி தகராறில் அவர் ஈடுபட்டு உள்ளார். ஆனால் அவை வீட்டுடன் முடிந்து உள்ளதால் பெரிய பிரச்சினை ஏற்படவில்லை. ஆனால் நேற்று அளவுக்கு அதிகமான போதையால் துடியலூர் பகுதியையே ரணகள்மாக்கி விட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Plus 2 girl in Coimbatore done a big dispute with high liquor drunken mode. people from that area embarrassed due to her activity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X