For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தம்மிநாயக்கன்பட்டியில் பிளஸ்டூ வரை (மட்டுமே) படித்த டுபாக்கூர் "டாக்டர்" கைது!

பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவர் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

தேனி: பிளஸ் படித்துவிட்டு தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள மலைகிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தவரை அதிகாரிகள் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள மலையடிவாரங்களில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி என கூறப்படுகிறது. இதனை பிளஸ் 2 படித்த ஒருவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். எதையும் நம்பக்கூடிய கிராம மக்கள்தானே என நினைத்து, தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டார்.

வீட்டிலேயே மருத்துவமனை

வீட்டிலேயே மருத்துவமனை

தம்மிநாயக்கன்பட்டியில் தன் வீட்டிலேயே ஒரு மருத்துவமனையையும் வைத்துக் கொண்டார். அதனையும் கிராம மக்கள் ஆதரித்தனர். இதில் சில நேரங்களில் ஆபிரகாம், வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருந்து, மாத்திரை, ஊசியும் போட்டு விட்டு வருவாராம். இதனால் பின்விளைவுகளை யோசிக்காமல் பலரும் தங்கள் உயிரையும், உடலையும் அவரிடம் ஒப்படைத்து சிகிச்சை பெற்று சென்றனர்.

கையும் களவுமாக பிடிபட்டார்

கையும் களவுமாக பிடிபட்டார்

ஆனால் விஷயம் அறிந்தவர்களின் காதுகளுக்கு இந்த செய்திவிட்டது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாரதிக்கு உடனடியாக தகவல் சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் தம்மிநாயக்கன்பட்டியில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வில் இறங்கினர். அந்நேரத்தில் ஆபிரகாம், கைதேர்ந்த டாக்டர் போல கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரை கையும் களவுமாக சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து தேவாரம் போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

பிளஸ்2 வரை படித்தவர்

பிளஸ்2 வரை படித்தவர்

அவரை கைதுசெய்த போலீசார் கிடுக்கிப்பிடு விசாரணையை தொடர்ந்துள்ளனர். பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு, இங்கிலீஷ் மருத்துவம் பார்த்து வந்துள்ள ஆபிகாரமின் சொந்த ஊர் கேரளாவிலுள்ள இடுக்கி என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தம்மிநாயக்கன்பட்டிக்கே வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

மருத்துவ வசதி தேவை

மருத்துவ வசதி தேவை

மலையடிவார கிராமப்புறங்களில் போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுத்துருந்தால் இதுபோன்று மனித உயிர்களுடன் விளையாடும் துணிச்சல் யாருக்காவது வருமா? இனியாவது கிராம மக்களின் எதிர்காலம், மற்றும் அங்குள்ள குழந்தைகளின் நலன் கருதி அரசு மருத்துவ வசதி அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

English summary
Plus 2 read the medicine Fake doctor arrested in Theni Dist
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X