For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்.. கடைசி இடத்தில் விழுப்புரம்!

பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்..கடைசி இடத்தில் விழுப்புரம்!- வீடியோ

    சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.

    இதைத்தொடர்ந்து http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியானது.

    1 சதவீதம் குறைவு

    1 சதவீதம் குறைவு

    அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.

    97% தேர்ச்சி

    97% தேர்ச்சி

    பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97% தேர்ச்சி விகிதத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.

    திருப்பூர் 3ஆம் இடம்

    திருப்பூர் 3ஆம் இடம்

    96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.

    விழுப்புரம் கடைசி இடம்

    விழுப்புரம் கடைசி இடம்

    பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83. 35% தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளது.

    தேர்வு முடிவு - எஸ்எம்எஸ்

    தேர்வு முடிவு - எஸ்எம்எஸ்

    மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் மதியம் 2 மணிக்குள் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 25ல் மறுதேர்வு

    ஜூன் 25ல் மறுதேர்வு

    இதனிடையே பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள்

    மாவட்ட வாரியாக தேர்வு முடிவுகள்

    1) விருதுநகர் 97.05%
    2) ஈரோடு 96.35%
    3)திருப்பூர் 96.1%
    4) இராமநாதபுரம் 95.88%
    5) நாமக்கல் 95.72%
    6) சிவகங்கை 95.60%
    7) தூத்துக்குடி 95.52%
    8) கோயம்புத்தூர் 95.48%
    9) தேனி 95.41%
    10)திருநெல்வேலி 95.15%
    11)கன்னியா குமரி 95.08%
    12) பெரம்பலூர் 94.10%
    13)கரூர் 93.85%
    14) சென்னை 93.09%
    15)திருச்சி 92.90%
    16) தரும்புரி 92.79%
    17) மதுரை 92.46 %
    18)சேலம் 91.52%
    19)ஊட்டி 90.66%
    20) தஞ்சாவூர் 90.25%
    21) திண்டுக்கல் 89.78%
    22)புதுக்கோட்டை 88.53%
    23) திருவண்ணாமலை 87.97%
    24)காஞ்சீபுரம் 87.21%
    25)திருவள்ளூர் 87.17%
    26) கிருஷ்ணகிரி 87.13%
    27)வேலூர் 87.06 %
    28) கடலூர் 86.69%
    29) நாகப்பட்டினம் 85.97%
    30) திருவாரூர் 85.45%
    31) அரியலூர் 85.38%
    32) விழுப்புரம் 83.35%

    English summary
    Plus 2 election result has been released. Virudhunagar is first in result with 97%, Vizhupuram is in last with 83.35%.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X