For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7ல் வெளியாக வாய்ப்பு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிந்தன.

தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14ம்தேதி தொடங்கி ஏப்ரல் 23ம்தேதி வரை நடந்தது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.

Plus Two results likely by May 7

மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. இரவு - பகலாக நடைப் பெற்று வரும் இந்த வேலை ஒரு சில நாட்களில் நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 7ம்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால் வினாத்தாள் திருத்தும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குறைவாக இருந்ததால் தாமதமாக நிறைவுப் பெற்றது. அதனால் தேர்வு முடிவு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திட்டமிட்டப்படி தேர்வு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

மே முதல் வாரத்தில் முடிவை வெளியிடலாம் என தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது. 7 அல்லது 9ந்தேதி முடிவு வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

பிளஸ்-2 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவு வெளியாகும் தேதியை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா முடிவு செய்து அறிவிப்பார்.

English summary
The valuation of Plus Two answer scripts is almost over in the State. K. Mohana Kumar, Joint Director, Examination, Directorate of Higher Secondary Education (DHSE), said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X