For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்.. சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன் வெடித்தது போராட்டம்

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

Google Oneindia Tamil News

Recommended Video

    வேறு மாநிலத்தில் நீட் எழுதும் மாணவர்களுக்காக உதவிக்கரம் நீட்டும் மக்கள்!- வீடியோ

    சென்னை: தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாததால் எஞ்சிய மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    PM and Director Gauthaman protesting in front of Chennai CBSE office

    இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

    இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு மையம் கூடுதலாக அமைக்கப்படாதததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினரும் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    இதேபோல் திரைப்பட இயக்குநர் கவுதமனும் தமிழகத்தில் போதுமான அளவுக்கு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை மத்திய அரசு தகர்க்கிறது என்றும் தமிழக மக்களின் கல்வி உரிமையயை பறிக்கும் செயல் என்றும் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    English summary
    Protest burst in Chennai for not keeping NEET exam centers in Tamil nadu. CPM and Director Gauthaman protesting in front of Chennai CBSE office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X