For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை தமிழர்களுக்கு இந்திய நிதியுதவியோடு 60,000 வீடுகள்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

இலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்திய நிதியில் இலங்கையில் வீடுகள்...தமிழர்களுக்கு பிரதமர் மோடி ஒப்படைத்தார்- வீடியோ

    சென்னை: இலங்கை தமிழர்களுக்காக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இலங்கையில் போர் முடிந்த பின் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மறுவாழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அங்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு இலங்கையில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    PM Modi inaugurates 60,000 homes for Sri Lanka Tamilians

    இது இந்தியாவும் இலங்கையும் சேர்த்து முடித்த திட்டம் ஆகும். இந்திய மத்திய அரசு இதற்காக ரூ.2,418 கோடியை ஒதுக்கீடு செய்து இருந்தது. இதன் மூலம் 47 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டது. மீதமுள்ள வீடுகள் இலங்கை அரசால் கட்டப்பட்டது.

    இதில் முதற்கட்டமாக 404 வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு நேற்று அளிக்கப்பட்டது. இலங்கை அரசும் மத்திய அரசும் சேர்ந்து இந்த விழாவை நடத்தியது. நுவாரா எலியா நகரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இருந்தனர்.

    PM Modi inaugurates 60,000 homes for Sri Lanka Tamilians

    இந்த நிகழ்ச்சியில்தான் பிரதமர் மோடி வீடுகளை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அவர் வீடுகளை திறந்து வைத்தார். இலங்கை இந்தியாவுடன் நல்ல உறவை பேணுவதாக அவர் இந்த காணொளி காட்சியில் உரையாற்றினார்.

    இலங்கைக்கும் இந்தியாவிற்கு நல்ல நட்பு இருக்கிறது. இரண்டு நாடுகளும் பெரிய பாரம்பரியம் கொண்டது. போருக்கு பின் அங்கு மறுவாழ்வு பணிகள் சிறப்பாக நடக்கிறது என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    PM Modi inaugurates 60,000 homes for Sri Lanka Tamilians yesterday through video conference.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X