For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியுடன் பாஜக கூட்டணி.. மோடி அளித்த பதிலைப் பாருங்க!

ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ரஜினியுடன் பாஜக கூட்டணி?...பிரதமர் மோடியின் பதில்- வீடியோ

    சென்னை: ரஜினியுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற யூகங்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தினத்தந்தி நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு இ மெயில் மூலம் தினத்தந்தி நாளிதழ் அனுப்பிய கேள்விகளுக்கு அவர் அனுப்பிய பதில்களை பார்ப்போம்.

    தமிழகத்தில் பாஜகவுக்கு தேர்தல் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருப்பதாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைக்காமல் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றோம்.

    ஆதரவுத் தளம்

    ஆதரவுத் தளம்

    தமிழகத்தில் இது ஒரு சாதாரண சாதனை அல்ல. எங்களுக்கென்று பாரம்பரியமாக ஆதரவு அளிக்கும் சில இடங்கள் உண்டு. இப்போது அந்த ஆதரவுத்தளம் விரிந்துள்ளது.

    மாற்றை தேடும் இளைஞர்கள்

    மாற்றை தேடும் இளைஞர்கள்

    நாங்கள் கடுமையாக உழைத்தால் நிச்சயமாக நல்ல வெற்றிகளை காணமுடியும் என்று நம்புகிறோம். தமிழக தேர்தல்களில் கடந்த பல ஆண்டுகளாக யாரை தேர்வு செய்வது என்ற விஷயத்தில் மிகக் குறைவான தேர்வுகளே இருப்பதால் மக்களும் இளைஞர்களும் மாற்றை தேடுகிறார்கள் என்றார் மோடி.

    ரஜினியை மதிக்கிறேன்

    ரஜினியை மதிக்கிறேன்

    ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அந்த கட்சியோடு பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு உங்கள் கேள்வியே தொடங்கினால் என்றுதானே தொடங்குகிறது. ரஜினியை அவருடைய சாதனைகளுக்காக நான் மதிக்கிறேன். ஆனால் யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    ரபேல் விவகாரம் குறித்து எதையும் வெளிப்படையாக கூறுவதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி ரபேல் விவகாரம் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளையே கூறி வருகிறது.

    வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    அதற்கான ஆதாரம் அவர்களிடம் இல்லை. விமானப்படை மேலும் திறம்பட செயல்படுவதற்கு இந்த ரபேல் விமானங்கள் உதவும். ஒரு அரசுக்கும் மற்றொரு நாட்டு அரசுக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தம் என்பதால் இதில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் இருக்கும் என்று கூறி கொள்கிறேன் என்றார் மோடி.

    English summary
    PM Narendra Modi says about his party will indulge alliance with Rajini's party or not? There are terrorist forces in Tamilnadu, he says.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X